பேட்ட படத்தில் மைக்கேலாக மாறிய பாபி சிம்ஹா!

petta movie BobbySimha character michael

Dec 18, 2018, 20:24 PM IST

பேட்ட படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹாவின் கதாபாத்திர பெயர் மற்றும் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

நேற்று சசிகுமாரின் மாலிக் கதாபாத்திரம் அறிமுகமான நிலையில், இன்று பாபி சிம்ஹாவின் கதாபாத்திரத்தின் பெயர் மைக்கேல் என படக்குழு அறிவித்து, அந்த படத்தில் வரும் அவரது லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

ஜிகர்தண்டா படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து தேசிய விருது வாங்கிய பாபி சிம்ஹாவின், கதாபாத்திரத்தில் தன்னை நடிக்க அழைத்திருந்தாலும் நடித்திருப்பேன் என ரஜினி புகழ்ந்து பேசினார். அதன் விளைவாக தான் கார்த்திக் சுப்பராஜுக்கு பேட்ட படத்தில் கால்ஷீட்டே ரஜினி கொடுத்தார்.

பேட்ட படத்தில் பாபி சிம்ஹா ரஜினி சைடா வில்லன் சைடா என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், மரண மாஸ் பாடலில் இவர் ரஜினியுடன் ஆடும் காட்சிகள் வெளியானதை வைத்து இவர், ரஜினியின் பக்கம் என்பதை கணிக்க முடிகிறது.

ஆனால், கார்த்திக் சுப்பராஜ் நிச்சயம் பாபி சிம்ஹாவுக்கு ஒரு வெயிட்டான ரோலை வைத்திருப்பார் என்பது தெரிந்த விஷயம் தான். மேலும், இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

நாளை எந்த கதாபாத்திரத்தை சன் பிக்சர்ஸ் அறிமுகப்படுத்தும் என்ற ஆவலோடு ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

You'r reading பேட்ட படத்தில் மைக்கேலாக மாறிய பாபி சிம்ஹா! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை