விமர்சனம்: சிரிக்கவைக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம்!

Silukkuvarpatti Singam Movie review

by Mari S, Dec 21, 2018, 08:33 AM IST

ராட்சசன் எனும் பயங்கரமான த்ரில்லர் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் காமெடி மோடுக்கு மாறி இருக்கும் படம் தான் சிலுக்குவார்பட்டி சிங்கம்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதை ஆசிரியர் செல்லா ஆய்யாவின் திறமையை கண்டறிந்த விஷால், பல தயாரிப்பாளர்கள் காசு கொடுக்காமல் ஏமாற்றியதால் தானே தயாரிப்பாளராக களமிறங்கி இந்த படத்தில் அவரை இயக்குநராக மாற்றி அழகு பார்த்துள்ளார்.

சூரியின் புஷ்பா புருஷன் காமெடி மற்றும் ரோபோ சங்கரின் அன்னைக்கு காலைல 6 மணிக்கு போன்ற அசத்தல் காமெடிகளால் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படம் சூப்பர் ஹிட் ஆனது.

அதுபோல, இந்த படத்தில் யோகி பாபு, கருணாகரன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் எல்லாத்துக்கும் மேல விஷ்ணு விஷால் மாறு வேஷம் என்ற பெயரில் மொக்கையாக போடும் ஒவ்வொரு கெட்டப்களும் அதற்கு வரும் பன்ச்களும் தியேட்டர்களில் சிரிப்பலைகளை எழுப்புகிறது.

படத்தின் கதை என்ன?

பயந்தாங்கோலி கான்ஸ்டபிள் சக்தியாக வரும் விஷ்ணு, அத்தை மகள் என்ற அடையாளம் தெரியாமல் துரத்தி துரத்தி ரெஜினா கசாண்ட்ராவை காதலிக்கிறார். தான் ஒரு பயந்தாங்கோலி என்பதால், பெரிய கேஸ்களை எடுக்காமல், சிம்பிளான பெட்டி கேஸ்களை மட்டும் பார்த்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டும் இவரிடம், சென்னையில் இருந்து முன்னாள் அமைச்சரான மன்சூர் அலிகானை கொல்ல வரும் சைக்கிள் சங்கரை (சாய் ரவி) எதிர்பாராமல் ஏற்படும் பிரச்சனை காரணமாக கைது செய்து சக்தி உள்ளே தள்ளுகிறார்.

பின்னர், சைக்கிள் சங்கரின் கதை அறிந்த சக்தி தலைமறைவாக பல வேசங்களை போட்டு தப்பிக்கிறார். சக்தியை எப்படியாவது கொன்றே தீர வேண்டும் என்ற வெறியில் அலையும் சைக்கிள் சங்கர் இறுதியில் சக்தியை பிடித்தாரா இல்லை சக்தியின் பயம் போய் கிளைமேக்ஸில் ரியல் ஹீரோவாக மாறுகிறாரா என்பதே சிலுக்குவார் பட்டி சிங்கத்தின் கதை.

இதற்கிடையே யோகி பாபுவின் ஒன்லைன் காமெடிகள், ஓவியாவின் 2 குத்தாட்டங்கள், ரெஜினா கசாண்ட்ராவின் காதல், கவர்ச்சி பாடல்கள், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், கருணாகரன் செய்யும் கலாட்டாக்கள் என ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைக்கிறது இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம்.

பிளஸ்:

யோகி பாபு, விஷ்ணு விஷால் கூட்டணி செய்யும் காமெடி கலாட்டா. இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் பின்னணி இசையில் எகிறி அடித்துள்ளார். பாடல்கள் சுமார் ரகம் தான். ஓவியா ஆர்மிக்காக வரும் டியார் ரியோ டியோ பாடல் ஆட்டம் போட வைக்கிறது.

மைனஸ்:

மற்ற காமெடி படங்களில் எதிர்பார்க்கக்கூடாத லாஜிக்குகள், வலுவில்லாத திரைக்கதை, டிஐ எனப்படும் கலர் கரெக்‌ஷனில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் இந்த வாரம் ரிலீசாகியுள்ள பெரிய படங்களில் காமெடிக்காக இந்த படத்தை தேர்வு செய்து பார்க்கலாம். விஷ்ணு விஷால் நம்மை ஏமாற்றவில்லை. ராட்சசன் படம் போல் இருக்கும் என்று பார்த்தால், படம் உங்களை பெரிதும் ஏமாற்றலாம்.

சிலுக்குவார்பட்டி சிங்கம் சினி ரேட்டிங்: 2.5/5.

You'r reading விமர்சனம்: சிரிக்கவைக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை