சின்னத்திரை மற்றும் பெரியத்திரைகளில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் சீனு மோகன் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்.
கிரேசி மோகனின் மேடை நாடங்களில் முதன் முதலில் தனது நடிப்பை சீனு என்ற கதாப்பாத்தின் மூலம் தொடங்கினார் மோகன். சீனு என்ற கதாப்பாத்திரம் அவருடை கதாப்பாத்திரத்துடன் ஒன்றிபோனதால் அவர் சீனு மோகன் என்று அழைக்கப்பட்டார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்து வந்த சீனு மோகன் நாடக மேடைகளை தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
குறிப்பாக, 1979ம் ஆண்டுகளில் இருந்து நாடக மேடையும், அதை தொடர்ந்து வருஷம் 16, அஞ்சலி, தளபதி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில், இறைவி, மெர்சல், ஆண்டவன் கட்டளை, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். குறும்படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே, கிரேசி மோகன் தொலைக்காட்சி தொடர்கள் எடுத்தபோதும் கூட அதில் சீனு மோகனுக்கு கதாப்பாத்திரம் இருக்கும். இதுபோல், சுமார் 3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார் சீனு மோகன்.
இந்நிலையில், சீனு மோகன் கடந்த சில நாட்களாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிக்சையும் எடுத்து வந்த நிலையில், இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சீனு மோகன் மரணமடைந்தார்.