இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள பேட்ட படம் மரணமாஸாக இருப்பதாக முதல் நாள் முதல் ஷோ படம் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில், சசிகுமார், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி, யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். உல்லாலா, மரண மாஸ் உள்ளிட்ட பாடல்கள் ஏற்கனவே செம ஹிட்டாகியுள்ள நிலையில் படத்திற்கான பிஜிஎம்மும் பக்காவாக அமைந்துள்ளது.
கல்லூரி வார்டனாக வலம் வரும் ரஜினி அங்கு, சிம்ரனை சந்திக்கிறார். அவர்களுக்குள் நடக்கும் ரொமான்டிக் சீன்கள் வேர லெவல். ஜோடி, டைம் படங்களில் பார்த்த அதே சிம்ரன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பேட்ட படத்தில் ஸ்டைலாக வருகிறார்.
இதற்கிடையே, அதே கல்லூரியில் படிக்கும் பாபிசிம்ஹாவின் அட்டகாசத்தால் வில்லன் நவாசுதீன் சித்திக்குடன் பிரச்னை ஏற்படுகிறது. இவர்களால், மாணவர்களுக்கு பிரச்னை ஏற்படும்போதும் ரஜினி என்டராகி, வில்லன்களை தும்சம் செய்கிறார். ஒரு வார்டன் எப்படி இப்படி வெறித்தனமாக சண்டைபோடுகிறார் என்று நினைக்கும்போது அங்கு அவருக்கு ஒரு பிளாஷ்பேக் போகிறது.
அதில், திரிஷா ரஜினியின் மனைவியாகவும், சசிகுமார் நண்பராகவும் வருகிறார். அங்கு கதை நகர்கிறது. ரஜினியுடன் யோகி பாபு கொடுக்கும் கவுன்டர்கள் திரையரங்குகளை அதிரவைத்துள்ளது.
வில்லனாக நடித்திருக்கும் விஜய்சேதுபதியின் நடிப்பும் தூள். ரஜினியின் ஸ்டைலிஷ் கெட்டப், தெறிக்கவிடும் வசனங்கள் வேரலெவல். பேட்ட படத்தில் மெசேஜூம் இருக்கிறது. படத்தின் கதை, ஒளிப்பதிவு, பிரேமுக்கு பிரேம் ரஜினியிஸ்ம்.. மொத்தத்தில் பேட்ட ரஜினியின் பக்கா மாஸ் படம்.