குடிபோதையில் தந்தையை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த மகன்

son killed his father by knife in chennai

by Subramanian, Apr 23, 2019, 11:47 AM IST

சென்னை பாடியில் குடிபோதையில் பெற்ற தந்தை என்று கூட பாராமல் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பாடி கலைவாணர் நகர் மதுரைவீரன் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (52). இவருக்கு குமரேசன், சூரிய பிரகாஷ் என 2 மகன்கள் உள்ளனர். தமிழ்செல்வன் தான் வசிக்கும் பகுதியில் பழக்கடை நடத்தி வந்தார். அவருக்கு உதவியாக மகன்கள் இருவரும் கடையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் பழக்கடையை மூடி விட்டு தமிழ்செல்வன், 2 மகன்களுடன் வீட்டுக்கு சென்றார். வீட்டில் வைத்து 2-வது மகனான சூரியபிரகாசுக்கும், தமிழ் செல்வனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது மது போதையில் இருந்த சூரியபிரகாஷ் தந்தையுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

மேலும் கோபத்தில் வீட்டில் இருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்த சூரிய பிரகாஷ், தந்தை என்றும் பாராமல் தமிழ்செல்வனை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் அவருக்கு கத்திக்குத்து விழுந்தது. பலத்த காயம் அடைந்த தமிழ்செல்வனை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சூரியபிரகாசை கைது செய்தார்.

சிவகார்த்திகேயன் எப்படி வாக்களிக்கலாம்...? அதிகாரிகள் மீது நடவடிக்கை..!

More Crime News


அண்மைய செய்திகள்