சென்னையில் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் மர்ம நபர்கள் 41 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி முதலில் மக்கள் தொலைக்காட்சியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சியில் பிரபலமானார். அது முதல் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளராக மாறினார். சன் டிவி அவரின் குட்டீஸ் சுட்டீஸ் நிகழ்ச்சி அவருக்கு மேலும் புகழை சேர்த்தது. 2006ல் காதல் திரைப்படம் வாயிலாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். அது முதல் பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் இமான் அண்ணாச்சி நடித்து வருகிறார்.
நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
You'r reading காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகைகள் கொள்ளை Originally posted on The Subeditor Tamil