அமெரிக்காவில் நாய்குட்டிகளை பிளாஸ்டிக் கவரில் கட்டி குப்பைத் தொட்டியில் போட்டு சென்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அழகிய நகரம் கோச்செல்லா. அந்த நகரத்தில் ஒரு குப்பை தொட்டியில் பிளாஸ்டிக் கவரில் 7 நாய்க்குட்டிகள் கிடந்துள்ளன. இதனை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பிறந்து 3 நாட்களேயான நாய்குட்டிகளை மீட்டனர். பின் அதுகுறித்து விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் சோதனை செய்த போது ஜீப்பில் வந்த ஒரு பெண் ஒருவர், பிளாஸ்டிக் கவரில் நாய்குட்டிகளை கட்டி குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு சென்றது கண்டறியப்பட்டது. பின் அந்த பெண் யார் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இறுதியில் நாய்க்குட்டிகளை வீசி விட்டுச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். விலங்குகள் காப்பகத்தில் தற்போது 7 நாய்க்குட்டிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.