பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவியை கைது செய்த போலீசார்

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. அவருடைய மனைவி ஹசின் ஜஹான். அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு தற்போது சுமூகமாக இல்லை. கடந்த ஆண்டு முகமது ஷமி மீது அவருடைய மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், முகமது ஷமியும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் போலீசில் புகார் செய்தார்.

இதற்கு பதிலடியாக முகமது ஷமி தரப்பிலும் ஹசின் ஜஹான் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. முகமது ஷமி மீது அவரது மனைவி தெரிவித்த சூதாட்ட புகாரில் உண்மை இல்லை என்பது தெரியவந்ததால் அவர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டார். முகமது ஷமியின் குடும்பத்தினர் உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவை அடுத்துள்ள அலிபுர் கிராமத்தில் வசித்து வருகிறார்கள். அந்த வீட்டுக்கு நேற்று முன்தினம் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் சென்றார்.

முகமது ஷமியின் குடும்பத்தினர் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து முகமது ஷமியின் தாயார் போலீசில் புகார் செய்தார். இதனை அடுத்து ஹசின் ஜஹானை கைது செய்த போலீசார் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.

இது தொடர்பாக ஹசின் ஜஹான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முகமது ஷமி எனது கணவர். அந்த வீட்டுக்குள் நுழைய எனக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் நான் எப்பொழுது அந்த வீட்டில் தங்க முயற்சித்தாலும், எனது மாமனாரும், மாமியாரும், என்னையும் என் குழந்தையையும் வெளியே தள்ள முயற்சிக்கின்றனர்’ என்று புகார் தெரிவித்தார்.

அமெரிக்காவில் குக்கர் குண்டு வைக்க சதி? முன்னாள் ராணுவ வீரர் கைது!

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds