ஆம்பூர் அருகே வாகன சோதனையின் போது, மினி லாரியில் கடத்தி செல்லப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அந்நகர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த சாலையில் வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது அந்த வாகனம் வேலூர் செல்வது தெரிந்தது.
பின்னர் போலீசார் அந்த வாகனத்தை செய்த போது அதன் உள்ளே ரூ.50 லட்சம் குட்கா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து லாரியுடன் ரூ.50 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா வை ஆம்பூர் நகர போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், சேலம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சுரேஷ், உதவியாளர் சரவணவேல், மற்றும் காரில் வந்த வேலூரை சேர்ந்த கவுஸ், பையாஸ், இப்ராஹிம்,ஆகிய 5 பேரை கைது செய்து லாரி மற்றும் காரை பறிமுதல் செய்து ஆம்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்
You'r reading வாகன சோதனையின் போது ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா சிக்கியது Originally posted on The Subeditor Tamil