தேயிலை கிடங்கு இடிந்து விழுந்து விபத்து: 7 பேர் பரிதாப பலி

Feb 15, 2018, 09:12 AM IST

கொழும்பு: தேயிலை கிடங்கு ஒன்று திடீரென இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் பிரேமதாசா கிரிக்கெட் மைதானம் அருகில் பழமையான தேயிலை கிடங்கு ஒன்று அமைந்துள்ளது. இந்த கிடங்கில் நேற்று சுமார் 12 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டுதை அடுத்து, மீட்புக்குழுவினருடன் அங்கு விரைந்தனர்.

பின்னர், மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், உயிருடன் மீட்ட 5 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கிடங்கு திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை