76வது முறையாக உடைந்து விழுந்தது கண்ணாடி: சென்னை விமான நிலையத்தில் தொடரும் அவலம்

Feb 19, 2018, 12:45 PM IST

சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று 76வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்துக்குள்ளானது. தொடரும் இந்த விபத்துகளால், பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் கண்ணாடிகள் பொருத்தி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
விமான நிலையம் விரிவாக்கம் செய்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்தடுத்து கண்ணாடிகள் விழுந்து உடையும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.

சில நேரங்களில் மேற்கூரை இடிந்து விழுவதும், கண்ணாடி கதவுகள் உடைந்து விழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 10 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று 76வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ மீனம்பாக்கம் உள்நாட்டு முறையத்தில் கண்ணாடி மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை ”என தெரிவித்தனர்.

You'r reading 76வது முறையாக உடைந்து விழுந்தது கண்ணாடி: சென்னை விமான நிலையத்தில் தொடரும் அவலம் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை