பீகாரில் டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம், சகார்சா மாவட்டத்தில் சதார் மருத்துவமனை உள்ளது. இங்கு, கடந்த 18ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு, இவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டித்ததால் அங்கு, டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக வீடியோ இணையத்தளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில் மயக்கத்தில் படுத்திருக்கும் பெண்ணின் கையில் அடிபட்டுள்ள நிலையில் அவருக்கு மற்றொரு பெண் டார்ச் பிடித்திருந்தார். அந்த வெளிச்சத்தில் காக்கி உடை அணிந்த நபர் சிகிச்சை அளிப்பது போன்ற காட்சிகள் அதில் பதிகாகி இருந்தது. இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், அப்பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், அப்பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
டார்ச் வெளிச்சத்தில், சரியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாததால் பெண் இறந்திருப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பெண் இறப்பிற்கு பிறகு, விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல போலீசார் தீவிரப்படுத்துவர் என தெரிகிறது.
டார்ச் வெளிச்சத்தால் அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட பெண் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.