70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை!

In USA, for the first time in 70 years a woman is executed

by Sasitharan, Oct 17, 2020, 20:36 PM IST

1953ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக தற்போது அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட இருக்கிறது. அதற்கு காரணம் அந்தப் பெண் செய்த கொடூர குற்றம்தான். அதுவும் அந்த குற்றம் 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. 16 ஆண்டுகளுக்கு குற்றவாளியான லிசா மாண்ட்கோமேரி என்ற 43 வயதுடைய அந்தப் பெண் தான் கர்ப்பமாகதததால், தனக்கு தெரிந்த பெண்ணான பாபி ஜோ ஸ்டின்னெட் கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து அவரின் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொலை செய்ததுடன், அவரின் வயிற்றை கிழித்து கருவிலிருந்த குழந்தையை திருடி தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் வெளியே தெரிந்ததை அடுத்து லிசாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வரும் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி லிசாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. விஷ ஊசி போட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. 70 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த மரண தண்டனைகள் டிரம்ப் ஆட்சி வந்ததில் இருந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Crime News

அதிகம் படித்தவை