கோவிட்-19 கிருமி பற்றிய பயம் அனைவருக்குமே உள்ளது. பயத்தைக் காட்டிலும் அதைக் குறித்த சந்தேகம் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பின் அறிகுறிகள், அதற்கான பரிசோதனைகளின் முடிவு இவற்றைப் பற்றிய ஐயம் பரவலாக உள்ளது.
கோவிட் பரிசோதனை துல்லியமானதா?
கொரோனா தொற்றுக்காகச் செய்யப்படும் PT-PCR எனப்படும் சோதனை, கோல்டு ஸ்டாண்டர்டு என்னும் தரத்தைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. ஆனாலும் மற்ற சோதனைகளைப் போன்று தவறான (false) முடிவு வரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எப்போது தவறான முடிவு கிடைக்கலாம்?
கீழ்க்காணும் காரணங்களால் கோவிட்-19 சோதனையில் தவறான முடிவு கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.தொற்றின் ஆரம்பக் காலத்தில் சோதனை
மாதிரி சரியாக சேகரிப்படாமை மாதிரி மாசுபடுதல்.கொரோனா தொற்று ஏற்பட்டோர் சிலருக்கு அறிகுறிகள் தெரிவதற்குக் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகக்கூடும். சிலர் தொற்றின் ஆரம்பக்காலத்தில் பரிசோதனை செய்திருப்பர். அப்படியானால் 'நெகட்டிவ்' என்னும் எதிர்மறை முடிவு, தொற்று இல்லை என்ற முடிவு கொடுக்கப்படும். அறிகுறிகள் இருப்பின் இன்னொரு முறை கொரோனா சோதனை எடுப்பதே தீர்வு.
கொரோனா சோதனைக்கு Q-tip என்னும் கருவியைப் பயன்படுத்தி மாதிரி (swab) சேகரிக்கப்படுகிறது. சோதனைக்குத் தேவையான அளவுக்கு வைரஸ் இருப்பதுபோல் மாதிரி சேகரிப்படாவிட்டால் சோதனை முடிவு தவறாக வரக்கூடும்.
கோவிட்-19 சோதனைக்காகச் சேகரிக்கப்பட்ட மாதிரி, சரியான வெப்பநிலையில் பாதுகாக்கப்படவேண்டும். ஆர்என்ஏ இருப்பை கண்டறியக் குறிப்பிட்ட வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்பட வேண்டும். மாதிரி மாசுபட்டால் தவறான முடிவு வர வாய்ப்புள்ளது.
காலம்
கொரோனா பரிசோதனை எப்போது செய்யப்படுகிறது என்ற காலமே மிகவும் முக்கியம். தவறான நேரத்தில் சோதனை செய்தால் 'நெகட்டிவ்' அல்லது 'பாசிட்டிவ்' என்று தவறான முடிவுகள் வரக்கூடும்.
எப்போது கொரோனா சோதனை செய்ய வேண்டும்?
அறிகுறிகள் இருந்தால் அல்லது கொரோனா பாதிப்புள்ள நபருக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய சந்தர்ப்பம் இருந்தால் கோவிட்-19 சோதனை செய்துகொள்ளவேண்டும்.
அறிகுறிகளும் நெகட்டிவ் ரிசல்ட்டும்
கோவிட்-19 பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்தாலும் சோதனை முடிவில் தொற்று இல்லை என்று கூறப்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பது பலரின் மனதில் இருக்கும் கேள்வி. எந்த முடிவும் நூறு சதவீதம் சரியானவையல்ல. சோதனை முடிவு தொற்று இல்லையென்று கூறினாலும், நோயின் அறிகுறிகள் இருந்தால் மற்றவர்களின் நலன் கருதி உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் நலம்.
மருத்துவ ஆலோசனை
கோவிட்-19 சோதனை முடிவு குறித்து சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் நேரடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். மருத்துவரால் மட்டுமே சரியான வழி காட்ட முடியும்.