டால்பின் மீனை அடித்து கொன்ற கும்பல்.. வீடியோவால் சிக்கிய 3 பேர்!

by Sasitharan, Jan 10, 2021, 10:05 AM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் டால்பின் மீனை கொடூரமாக அடித்துக் கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆற்றின் கால்வாயில் காணப்பட்ட அரிய வகை டால்பின் மீன் ஒன்றை 5 பேர் கொண்ட இளைஞர் கும்பல் கோடரி, கட்டைகளை கொண்டு அடித்து கொன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இச்செயல் மீன் பிரியர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

இந்தியாவில் மட்டுமே காணக் கூடிய நன்னீர் டால்பின் வகையான கங்கை நதி டால்பின் மீன் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன் மற்றொரு பிரிவு சிந்து நதி டால்பின் என அழைக்கப்படுகிறது. மிகவும் அரிதான, தீங்கிழைக்காத உயிரினங்களில் ஒன்றான இந்த மீனைதான் இந்த கும்பல் கொன்றுள்ளது.

இதற்கிடையே, இந்த வீடியோ தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அந்த வீடியோ உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரதாப்கர் பகுதியில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. தொடர்ந்து, வீடியோ பதிவில் தெரிந்த அடையாளத்தின் அடிப்படையில் 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை