ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலம், கோதாவரி ஆற்றில் தேவிப்பட்டணத்தில் இருந்து கொண்டமொதலு நோக்கி 55 பேருடன் படகு ஒன்று சென்றது. அப்போது, அந்த படகு மாண்டூர் அருகே படகு சென்றபோது காற்று பலமாக வீசியதால் படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 55 பேரும் கடலில் மூழ்கி தத்தளித்தனர். இந்த கோர விபத்தில் சுற்றுளா பயணிகள் 20 பேர் நீச்சலடித்தபடி கரைக்கு வந்து சேர்ந்தனர். மேலும் 35 பேரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து தெரியாமல் இருந்தது.
இதுதொடர்பாக, தேவிப்பட்டினம் போலீசார் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மாயமான 35 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 30 பேர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த கோர விபத்து தொடர்பாக நடத்திய விசாரணையில், அனுமதியில்லாமல் கூடுதலாக 7 பயணிகளுடன் படகு இயக்கப்பட்டது தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, படகு உரிமையாளர் காஜாவை தேவிப்பட்டினர் போலீசார் கைது செய்துள்ளனர்.