கரூர் அருகே பள்ளி வாகனத்தின் மீது போர்வெல் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 8 குழந்தைகள் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.
கரூர் மாவட்டம் வெள்ளியணை தனியார் மெட்ரிக் பள்ளி பேருந்து மாணவர்கள், ஆசிரியர்களை ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி சென்றது. செல்லாண்டிப்பட்டி பிரிவில் வாகனத்தை நிறுத்தி, மாணவர்களை இறக்கி கொண்டிருந்தனர்.
அப்போது கரூரில் இருந்து வெள்ளியணை நோக்கி வந்த போர்வெல் லாரி பள்ளி வாகனம் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.
இந்த விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு கரூர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போர்வெல் லாரி ஓட்டுநரின் அலட்சியமே இந்த விபத்திற்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.