இசை சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி இளையராஜா! #HBDIlayaraja

இன்னிசை துடிப்பை தீர்மானிக்கும் தன்னேரில்லா ஜாம்பவான் இளையராஜா

by Radha, Jun 2, 2018, 10:18 AM IST

இன்னிசை துடிப்பை தீர்மானிக்கும் தன்னேரில்லா ஜாம்பவான் இளையராஜாவின் பிறந்தநாள் இன்று.

Ilaiyaraaja

அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ராகதேவன் இளையராஜா. தேனி மாவட்டம் பண்ணபுரத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே ஆர்மோனியம், கிடார் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவர்.

இவரது சகோதரர் பாவலர் வரதராஜனுடன் இணைந்து நாட்டின் பல இடங்களுக்கு சென்று சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார் இளையராஜா...

வாழ்வின் அனைத்து நிலையிலும் வர்ணம் சேர்க்கும் இளையராஜாவின் பாடல்களுக்கு மயங்காத மனங்களே இல்லை. கிராமிய இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர் இவர்.

Ilaiyaraaja

How to name it, Nothing but wind. India 24 hours, திருவாசகம், உள்ளிட்ட இவரது இசை தொகுப்பு (சிம்பொனி) உலக இசை கலைஞர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இசை உலகின் தன்னேரில்லா இளையராஜா, இந்தியாவின் மிக உயரிய 2 வது விருதான பத்ம விபூஷன் மற்றும் 4 முறை சிறந்த இசை அமைப்பாளர்களுக்கான தேசிய விருது பெற்றவர். இசை மகுடத்தில் வைரக் கற்களை பதித்து வரும் இசைஞானி இளையராஜா, மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.

Ilaiyaraaja

இன்று 75-ஆவது பிறந்தநாள் காணும் இவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யாம் பெற்ற பெரும்பேறாகக் கருதுவதாக’ குடியரசு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading இசை சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி இளையராஜா! #HBDIlayaraja Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை