உளவுத்துறை அதிகாரி போல் நடித்து சென்னையில் நகை, பணம் கொள்ளை

Sep 24, 2018, 22:39 PM IST

சென்னை மயிலாப்பூர் அருகே உளவுத்துறை அதிகாரிகள் போல் நடித்து ஆட்டோவில் முதியவரை கடத்தி சென்று மர்ம நபர்கள்கள் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் பரமசிவம். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர், நாகேஸ்வரராவ் பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த கும்பல், கட்டிட வேலைக்கு ஆள் கிடைக்குமா என்று பரமசிவனிடம் பேச்சு கொடுத்துள்ளனர் .

தேனாம்பேட்டை சென்றால் அங்கு ஆட்கள் இருப்பார்கள் என பரமசிவம் கூறியிருக்கிறார். அந்த நபர்கள், பரமசிவம் எங்கே வேலை செய்தார் என்பது உள்ளிட்ட பல தகவல்களை சேகரித்துள்ளனர்.

பின்னர் தாங்கள் உளவுத்துறை சிஐடி ரகசிய போலீஸ் என்றும், பொதுப்பணித்துறையில் பணியாற்றும் சில பொறியாளர்கள் புகைப்படம் தங்களிடம் உள்ளதாகவும், அவர்கள் குறித்து விசாரிக்க பரமசிவத்தின் உதவி தேவை என கூறியுள்ளனர். இதனை நம்பிய பரமசிவம் ஆட்டோவில் ஏறி இருக்கிறார்.

அதன் பின்னர் பரமசிவத்திடன் அவருடைய மோதிரத்தை கேட்டுள்ளனர். மோதிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டில் உள்ள சில ரகசிய எண்களை வைத்து குற்றவாளிகளை கண்டு பிடித்துவிடலாம் என மர்மநபர்கள் பரமசிவத்திடம் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னரே பரமசிவத்துக்கு தாம் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. பரமசிவத்தை வைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கும் சுற்றிய மர்ம நபர்கள் இறுதியாக தியாகராயநகரில் உள்ள அபிபுல்லா சாலையில் ஆள் நடமாட்டமற்ற பகுதியில் ஆட்டோவை நிறுத்தி பரமசிவத்தை இறங்கி உள்ளனர்.

மோதிரம் மற்றும் பணத்தை பறித்த கொள்ளையர்கள், இதுபற்றி சத்தம் எதுவும் போட்டால் குத்திக் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். கடைசியாக, ஆட்டோவில் இருந்த 2 மர்ம நபர்கள் செல்வதற்கு, முன்னால் பரமசிவத்திடம் இனிமேல் இதுபோன்று யாரும் உளவுத்துறை சிஐடி போலீஸ் என்று கூறினால், அவர்களுடன் போக வேண்டாம் எனவும், அவர்கள் கொண்டுவரும் வாகனத்தில் ஏற வேண்டாம் எனவும் அறிவுரை கூறி விட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து பரம சிவம் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உளவுத்துறை சிஐடி போலீசார் என்று கூறி கொள்ளையில் ஈடுபட்ட 2 மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading உளவுத்துறை அதிகாரி போல் நடித்து சென்னையில் நகை, பணம் கொள்ளை Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை