மாட்டுப் பொங்கலை போல குதிரை பொங்கல் திண்டுக்கல் அருகே விசித்திரம்

திண்டுக்கல் அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ளது சிறுமலை கிராமம் இங்கு பழையூர், புதூர், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர் புரம், தென்மலை, உள்ளிட்ட ஏராளமான மலைக் கிராமங்கள் உள்ளது இந்த மலை கிராமங்களில் சாலைவசதி கிடையாது. இங்கு உள்ள விளை நிலங்களில் வாழை, எலுமிச்சை, அவரை, காப்பி, ஏலக்காய், பலாப்பழம் போன்றவற்றைப் பயிரிடப்படுகிறது. மலைப்பகுதியில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை நகர்ப் பகுதிக்கு எடுத்துவர இக்கிராம மக்கள் குதிரைகளைப் பயன்படுத்துகின்றனர். குதிரையின் முதுகில் மூட்டையாகக் கட்டி காய்கறிகளை எடுத்து வந்து விற்பனை செய்வது அவர்களது வழக்கம். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் இரண்டு குதிரையாவது உண்டு.

பொங்கலுக்கு அடுத்த நாளான இன்று மாட்டுப் பொங்கல் தமிழகம் முழுவதும் கிராமங்களில் மாடுகளுக்குப் பொங்கல் வைத்துக் கொண்டாடப்பட்டது. . அதேபோல் சிறுமலையில் மலைப்பகுதியில் குதிரை பொங்கல் கொண்டாடுவது வழக்கம். தங்களுக்கு விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கக் கூடிய குதிரைகளைத் தெய்வமாகக் கருதி அதனைக் குளிப்பாட்டி அதற்கு அலங்காரம் செய்து மாலை அணிவித்து வழிபாடு செய்து குதிரைக்கு உணவு ஊட்டி விட்டனர். பின்னர் அனைத்து குதிரைகளையும் ஒன்று சேர்த்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்த நாளில் குதிரைக்கு முழு ஓய்வு அளிக்கப்பட்டு அதனைச் சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விடப்படும். இன்று இந்த மலையோர கிராமங்களில் கிராம மக்கள் குதிரையைத் தெய்வமாக வழிபட்டு குதிரை பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement

READ MORE ABOUT :