திண்டுக்கல் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் லஞ்ச நகை பறிமுதல்...!

Dindigul Mineral Resources Officer confiscates 100 sovereign of bribe jewelery at home

by Balaji, Oct 22, 2020, 17:28 PM IST

ஈரோடு மாவட்டம் பவானியில் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 100 சவரன் தங்க நகை பறிமுதல் செய்தனர். குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் பவானி கவுண்டர் நகர் வீதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் திண்டுக்கல்லில் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது கனிம வளத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள அவரது வீட்டில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் 5 மணி நேரத்திற்கு மேலாகச் சோதனை நடத்தினர். பெருமாளின்
மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த.உரிய ஆவணம் இன்றி கணக்கில் வராத 100 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் நடந்த சோதனை அரசு அதிகாரிகளிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading திண்டுக்கல் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் லஞ்ச நகை பறிமுதல்...! Originally posted on The Subeditor Tamil

More Dindigul News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை