கழுத்தை அறுத்து கிணற்றில் கல்லை கட்டி சலடத்தை போட்ட வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் சொத்து தகராறில் கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவர் மீது கஞ்சா விற்பனை தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவரது உறவினரான சின்னாளபட்டி வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், உறவினர் ராஜபாண்டி வசித்து வந்த வீட்டை அபகரித்ததாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி ராஜாவும் அவரது மகன் சரத்குமார் இருவரும் ராஜபாண்டியை இருசக்கர வாகனத்தில் வைத்து மேலக்கோட்டை அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

இதனை அடுத்து அதே பகுதியில் உள்ள அரண்மனை கிணறு என்ற கிணற்றின் அருகே ரத்தக் கரை கிடந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகமடைந்து சின்னாளபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததில் ராஜபாண்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் ஆத்தூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் தேடியதில் ராஜபாண்டியின் உடல் கல்லில் கட்டப்பட்டு பாழடைந்த கிணற்றுக்குள் கிடந்தது.

தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு வெளியில் தூக்கி வந்தனர். பின்னர் இறந்தவரைப் அடையாளம் செய்ததில் இறந்தவர் ராஜபாண்டி என்பது தெரியவந்தது. மேலும் ராஜபாண்டியை கொலை செய்த அவரது உறவினரான ராஜாவும், மகன் சரத்குமாரும் தலைமறைவாகினர்.

இருவரையும் 3 தனிப்படை அமைத்து சின்னாளபட்டி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி ஆத்தூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கலைநிலா முன்னிலையில் ராஜா மற்றும் அவரது மகன் சரத்குமார் இருவரும் சரணடைந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ராஜாவின் மருமகனான பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement
/body>