தல ரசிகர்களுக்கு தலை வழியை கொடுத்த வலிமை படம் அப்டேட்

நேர் கொண்ட பார்வை திரைப் படத்திற்கு பிறகு இயக்குநர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் உடன் இரண்டாவது முறையாக அஜித் இணைந்துள்ள படம் வலிமை.

வலிமை படத்தில் அஜித், போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். போதை பொருள் கடத்தல்காரர்களை எதிர்க்கும் போலீசாக அவர் நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயாவும், ஹீரோயினாக ஹூமா குரேஷியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜ் ஐயப்பா, சுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் முதல் உள்ளூர் டிவி நிகழ்ச்சி நேரலை வரை அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு ரகளை செய்தனர். இந்த படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டி ஆகி உள்ளது. அஜித் கோரிக்கை வைத்த பிறகும் வலிமை அப்டேட் கேட்பதை ரசிகர்கள் நிறுத்தியதாக தெரியவில்லை.

வலிமை திரைப்படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை அஜித்தின் 50 வது பிறந்த நாளான மே 1 ஆம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. இதற்காக, பாலிவுட்டின் புகழ்பெற்ற போஸ்டர் டிசைனரான ராகுல் நந்தா தான், வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை வடிவமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், “ எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித்குமார் அவர்களின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம். அந்த அறிவிப்பு வெளிவரும்போது கொரோனா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ அதன் தாக்கம் சுனாமி போல தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து உற்றார் உறவினர் உயிர் இழந்து நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர்.

இத்தகைய அதாசாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டூடியோஸ் பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் இப்படத்தில் நடித்து உள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்து உள்ள முடிவின் படி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலத்துக்காகவும், பாதுகாப்பாகவும் பிராத்திப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தல ரசிகர்கள் தலையை பிய்த்துக்கொண்டுள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds