பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு வழக்கம் போல் மாணவிகள் தான் டாப்!

TN HSLC results released Female Students passed in high percentage

by Mari S, Apr 19, 2019, 09:44 AM IST

தமிழக மாணவர்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57%.

பள்ளி படிப்பை முடித்து கல்லூரி மற்றும் பிற படிப்புகளுக்கு அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டாக இன்றைய தேர்வு முடிவுகள் அமைய உள்ளன.

தமிழகத்தில் மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை நடந்த பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்களின் வாயிலாகவும், நீங்கள் படித்த பள்ளிகளுக்கும் சென்று அறிந்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்கள் பதிவுசெய்துள்ள மொபைல் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். இதில், மாணவர்களை விட இம்முறையும் மாணவிகளே அதிகளவில் தேர்வாகி உள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் மொத்தம் தேர்ச்சி அடைந்தவர்கள் 91.03%. இதில், மாணவிகள் 93.64% தேர்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் மாணவியரை விட 5 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்து 88.57% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வில் தோல்வியடைந்த 8.87% மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு வரும் ஜூன் 6 முதல் ஜூன் 13 வரை நடைபெறும். அதற்கு தயாராகி தவறவிட்ட வெற்றியை மீண்டும் பெறலாம். நாளை முதல் வரும் 26ம் தேதி வரை தற்காலிக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்!

You'r reading பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு வழக்கம் போல் மாணவிகள் தான் டாப்! Originally posted on The Subeditor Tamil

More Education News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை