மாற்றுத்திறனாளிகளுக்கு AICTE மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பற்றி தெரிந்து கொள்வோம் !

Advertisement

அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் ( AICTE ) சார்பாக ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பெயர் SAKSHAM ஆகும்.SAKSHAM திட்டமானது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு AICTE ன் மூலம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிப்பது மற்றும் அவர்களைத் தொழில்நுட்பம் சார்ந்த உயர் கல்வியில் சேர ஊக்குவிக்கவும் மற்றும் அவர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை அளிப்பதற்காகவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1000 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆண்டிற்கு 500 பட்டய படிப்பில் சேரும் மாணவர்கள் மற்றும் 500 பட்ட படிப்பில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.தகுதியான விண்ணப்பங்கள் வராத பட்சத்தில் இரண்டில் அதிகம் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இந்த உதவித்தொகை அளிக்கப்படும்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் குறைபாடு 40% குறைவாக இருத்தல் கூடாது.ஆண்டு வருமானம் 8 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். திருமணம் ஆன பெண்ணாக இருந்தால் பெற்றார் அல்லது மாமனார் / மாமியார் வருமானத்தில் குறைவானது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த திட்டத்திற்கு மாணவர்கள் முழுவதும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் .

உதவித்தொகை எவ்வளவு ?

கல்லூரி கட்டணமாக ஆண்டிற்கு 30000 அல்லது கல்லூரியின் உரியக் கட்டணம் இதில் எது குறைவோ அதை உதவித்தொகையாகப் பெறலாம். கல்விக் கட்டணத்தைத் தவிர இதர செலவினங்களுக்காக ( incidental charge ) மாதத்திற்கு 2000 என ஆண்டிற்கு பத்து மாதங்கள் வழங்கப்படும்.

இட ஒதுக்கீடு

இந்த உதவித்தொகையும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் வழங்கப்படும்.

பட்டியலின மக்களுக்கு -15%
பழங்குடியினர் மக்களுக்கு -7.5%
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு -27%

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்.

1.மதிப்பெண் சான்றிதழ் 10 / 12 வகுப்பு .

2.வருமான சான்றிதழ்

3.மாற்றுத்திறனாளி சான்றிதழ்

4.DOTE லி இருந்து பெறப்பட்ட சேர்க்கை படிவம் ( Admission letter)

5.கல்லூரியால் வழங்கப்பட்ட சான்றிதழ்

6.கல்விக் கட்டண ரசீது

7.வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் ( ஆதார் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்)

8.சாதி சான்றிதழ் ( Community certificate )

9.ஆதார் அட்டை (Aadhaar card )

10. பெற்றோர் கையொப்பமிட்ட படிவம் .

போன்றவற்றை இணைக்க வேண்டும். இந்த உதவித்தொகையை இணை வழியில் விண்ணப்பத்து கொள்ளலாம்.

மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க
http://www.aicte-pragati-saksham-gov.in/

Advertisement
மேலும் செய்திகள்
technical-council-warning-4-lakh-aryan-students-shocked
தொழில்நுட்ப கவுன்சில் எச்சரிக்கை! 4இலட்சம் அரியர் மாணவர்கள் அதிர்ச்சி !
let-s-find-out-about-aicte-scholarships-for-the-handicapped
மாற்றுத்திறனாளிகளுக்கு AICTE மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பற்றி தெரிந்து கொள்வோம் !
how-to-apply-federal-government-scholarship-without-competitive-examinations
போட்டித் தேர்வுகள் இல்லாமல் வழங்கப்படும் மத்திய அரசின் உதவித்தொகை - எப்படி விண்ணப்பிப்பது?
how-to-apply-women-s-higher-education-scholarship
பெண்கள் மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை... எப்படி விண்ணப்பிப்பது? AICTE வழங்கும் பெண் மாணவிகளுக்கான உதவித்தொகை!
13-off-student-future
13 சதவீதம் குறைவு ! மாணவர்களின் எதிர்காலம் என்னாவது ?
Telangana-education-board-flip-flop-over-marks-of-students
பெயில்.. அப்புறம் பாஸ்.. கடைசில பெயில்... தப்பு தப்பா திருத்திய தெலுங்கானா ஆசிரியர்கள்
UPSC-Civil-Services-Prelims-exam-conducted-in-72-cities
72 நகரங்களில் நடக்கிறது ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வு
Anna-University-Cancelled-22-Engineering-College-Licence
22 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு மூடு விழா; அண்ணா பல்கலைக் கழகம் வச்சது வேட்டு!
TN-Eleventh-Standard-Public-Results-announced-today
ஈரோடு முதலிடம்.. வேலூர் கடைசி இடம்.. இது பிளஸ் 1 தேர்ச்சி ரிசல்ட்!
master-course-entrance-exam-TANCET-anna-university-taken-charge
ஆன்லைன் பதிவு தொடக்கம்...! TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலை., நடத்தும்!

READ MORE ABOUT :

/body>