மனைவியுடன் பிரபல நடிகர் பார்த்து ரசித்த கமலின் 10 வருடத்துக்கு முந்தைய படம்

by Chandru, Sep 5, 2020, 11:50 AM IST

மொழி, நினைத்தாலே இனிக்கும் போன்ற தமிழ்ப் படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் பிரித்வி ராஜ். தற்போது முழுக்க மலையாள படங்களில் கவனம் செலுத்துவதுடன் சொந்தமாக படம் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் வெளியில் செல்லாமல் பாதுகாப்பாக வீட்டில் பொழுதைக் கழித்து வரும் பிரித்விராஜ் தனக்கு பிடித்தமான கிளாசிக் படங்களை ஒடிடியில் திரையிட்டு பார்த்து ரசிக்கிறார். கூடவே தன் மனைவியையும் அமர்த்திக்கொண்டு படத்தை ரசிக்கிறார்.

கமல்ஹாசன் 3 வேடங்களில் நடித்த படம் மைக்கேல் மதனா காமா ராஜன் படம் கடந்த 1990ம் ஆண்டு திரைக்கு வந்தது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கி இப்படத்தில் குஷ்பு, ரூபினி, ஊர்வசி ஆகியோரும் நடித்திருந்தனர். நகைச்சுவையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. படம் வெளியாகி 10 வருடத்துக்கு பிறகு இப்படத்தை பிரித்விராஜ் ஒடிடி தளத்தில் பார்த்து ரசித்தார்.

படத்தை முழுமையாக ரசித்துப் பார்த்து விட்டு அதுபற்றி வலைத் தள பக்கத்தில், ஒரு சில படங்களே மைக்கேல் மதன காமராஜன் படம் போன்று கிளாசிக் படங்களாக இருக்கின்றன. உலக சிறந்த நடிகர் கமல்ஹாசன், சாதனை நடிகை ஊர்வசி இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். என் மனைவியும் உடன் அமர்ந்து படத்தை முழுமையாக ரசித்துப் பார்த்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரித்விராஜ்

P

READ MORE ABOUT :

More Cinema News