லாக்டவுனுக்கு எதிராக கருத்து, கர்ப்பிணி கைதால் சர்ச்சை

by Nishanth, Sep 5, 2020, 11:37 AM IST

ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்ன் அருகே உள்ள விக்டோரியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோ புஹ்லர். இவருக்கு 4, 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது இவர் கர்ப்பிணியாகவும் உள்ளார். விக்டோரியா பகுதியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் கடந்த மாதம் முதல் அப்பகுதி ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு லாக் டவுன் அமல்படுத்தப்பட்டு கடும் நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் விக்டோரியாவிலிருந்து வெளியே செல்லவும், வெளியே இருந்து உள்ளே செல்லவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்து சோ புஹ்லர் சமூக இணையதளங்களில் கருத்துக்களை வெளியிட்டார். யூடியூபிலும் லாக்டவுனுக்கு எதிராகக் கடுமையாகப் பேசி வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து விக்டோரியா போலீசுக்குத் தெரியவந்தது. இதையடுத்து புஹ்லரின் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் பிஞ்சு குழந்தைகளின் முன்வைத்து கர்ப்பிணியான புஹ்லரின் கைகளில் விலங்கு வைத்து போலீசார் கைது செய்து கொண்டு சென்றது ஆஸ்திரேலியாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் கைது செய்து கொண்டு செல்லும் காட்சியை அவரது கணவர் செல்போனில் படம் பிடித்து சமூக இணையதளங்களில் வெளியிட்டார்.

இதுகுறித்து புஹ்லர் கூறுகையில், 'நான் வேண்டுமென்றே அந்த தவறை செய்யவில்லை. போலீசார் என்னை எச்சரித்து இருந்தால் நான் அவ்வாறு செய்திருக்க மாட்டேன் என்று கூறினார். இது தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் லூக் கோர்னாலியஸ் கூறுகையில், அவரை கைது செய்த நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை. கர்ப்பிணியான ஒருவரைக் கைது செய்தது வேதனை தான் என்றாலும் எங்களுக்கு வேறு வழியில்லை என்றார். இதேபோல ஆஸ்திரேலியாவில் லாக்டவுனுக்கு எதிராகப் பேசி பொது மக்களைப் போராட்டத்திற்குத் தூண்டியதாகக் கடந்த சில தினங்களுக்கு முன் 3 பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE ABOUT :

More World News

அதிகம் படித்தவை