அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கி வந்த 22 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளின் உரிமத்தை அண்ணா பல்கலைக் கழகம் அதிரடியாக ரத்து செய்தது.
பிரியாணி கடைகளை போல தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் அதிகரித்தன. இந்நிலையில், 535 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு மட்டுமே நடப்பாண்டில் அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி அளித்துள்ளதாகவும், சரியான வசதிகள் மற்றும் நிர்ணயித்த தகுதிக்குள் வராத 22 இன்ஜினியரிங் கல்லூரிகள் உடனடியாக மூடப்பட உள்ளதாகவும் அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் போதுமான வசதிகள் இருக்கிறதா? என்ற ஆய்வை அண்மையில் மேற்கொண்ட அண்ணா பல்கலைக் கழகம் 92 கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்த தகுதியான ஆசிரியர் இல்லை என்றும், விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வில்லை என்றும் கண்டறிந்துள்ளது.
இதில், பல வகையில் மோசமான சூழலில் இருக்கும் 22 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளை முதலில் மூட அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், 92 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 300 பாடப்பிரிவின் கீழ் 15 இடங்களையும் அண்ணா பல்கலைக் கழகம் குறைத்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த 92 இன்ஜினியரிங் கல்லூரிகளில் நீக்கப்பட்ட 22 இன்ஜினியரிங் கல்லூரிகளை தவிர்த்து எஞ்சியுள்ள கல்லூரிகள் கூடிய சீக்கிரத்தில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகுதியான ஆசிரியர்களை நியமிக்காத பட்சத்தில், அனைத்து கல்லூரிகளின் அங்கீகாரங்களும் ரத்து செய்யப்படும் என்ற எச்சரிக்கையையும் அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
அப்படியே அந்த 92 கல்லூரிகளின் விவரங்களை கூறிவிட்டால், மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது பெற்றோர்களின் கோரிக்கை.
விடுதலைப்புலிகள் மீதான தடை – மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது மத்திய அரசு