அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது. இதனை அகில இந்தியத்
தொழில்நுட்ப கவுன்சில் ஏற்கவில்லை. தங்களை மீறி அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி
அளித்தால் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்று தொழில்நுட்ப கவுன்சில் எச்சரித்துள்ளது. இதனால் 4 லட்சம் பொறியியல் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து பள்ளி , கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன இந்நிலையில் தமிழக அரசு பத்தாம் வகுப்பு இறுதி தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரையும் நிகழ இருந்த பருவத் தேர்வில் தேர்ச்சி என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது இது தொழில்நுட்ப கழகத்தின் பரிந்துரையில் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த மாணவர்களுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைவரின் அரியர் தேர்வுகளும் கட்டணம் கட்டியிருந்தால் தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் இது சம்பந்தமாக எந்தவிதமான அரசாணையும் இன்னும் வெளியிடப்படவில்லை.இந்நிலையில் இந்த அறிவிப்பைத் தொழில்நுட்ப கவுன்சில் எதிர்த்துள்ளது. இந்த அறிவிப்பால் அண்ணா பல்கலைக் கழகத்தின் மூலம் படித்த 4 இலட்சம் மாணவர்களில் 2 இலட்சம் மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து அரியர் உடன் உள்ளனர். இந்த அறிவிப்பால் இவர்கள் பட்டம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எந்த தேர்வும் எழுதாமல் தேர்ச்சி என்ற அறிவிப்பு திறன் மிகு மாணவர்களை உருவாக்காது. எனவே இந்த அறிவிப்பை நீக்கம் செய்ய வேண்டும் . இல்லையென்றால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா வரவேற்றுள்ளார்.மேலும் பல கல்வியாளர்களும் தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து வந்த நிலையில் தொழில்நுட்ப கவுன்சிலின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.