ரஜினிகாந்த் கட்சியில் சேர்வேன் பிரபல நடிகர் திடீர் அறிவிப்பால் பரபரப்பு..

Raghava Lawrence will Join Rajinis Political Party

by Chandru, Sep 5, 2020, 15:55 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் செய்யவிருப்பதாக 2 வருடத்துக்கு முன் அறிவித்தார். அவர் கட்சி தொடங்குவது எப்போது என்று அறிவிக்கவில்லை. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினியின் ஆன்மிக அரசியல் கட்சியில் சேர்ந்து சேவையாற்ற உள்ளதாக இன்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம், இன்று நான் மிக முக்கியமான ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

கடந்த மாதம் நான் ஒரு விஷயத்தைப் பதிவு செய்திருந்தேன். அரசியலில் நுழையாமல் கூட நாங்கள் சேவை செய்ய முடியும் என்று. இந்த அறிக்கையின் பின்னணியில் எனது காரணம் என்னவென்றால், நான் பல சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும்போது, எனது நண்பர்கள், ரசிகர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் பல அரசியல்வாதிகள் என்னிடம் கேட்கிறார்கள், நான் அரசியலில் நுழைவதற்கு இதையெல்லாம் செய்கிறேனா என்றும், மேலும் சிலர் என்னால் அரசியலில் நுழைந்தால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

கொரோனா காலகட்டத்தில் நான் செய்த சேவையின் மூலம் அரசியலில் நுழையும் அழுத்தம் அதிகரித்துள்ளது. அனைவருக்கும், நான் ஒரு பொதுவான நபர் என்று சொல்ல விரும்புகிறேன். நான் எனது சேவையை எனது சொந்த வீட்டில் குழந்தைகளுக்காக தொடங்கினேன்.எனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் நான் அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பேன் அதற்கு எனக்கு அனைவரும் உறுதுணையாக இருந்துள்ளனர். கலைஞர் அய்யா, ஸ்டாலின் சார், அன்புமணி ராமதாஸ் சார் போன்றோர் பல இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவியுள்ளனர். ஜெயலலிதா அம்மா, எடப்பாடி. கே.பழனிசாமி ஐயா, ஓ.பன்னீர்செல்வம் சார், விஜய பாஸ்கர் சார் மற்றும் பலர் பல்வேறு சேவைகளைச் செய்ய எனக்கு ஆதரவளித்துள்ளனர்.நான் அரசியலில் நுழைந்தால் ஒற்றை மனிதனாகச் செய்வதை விட அதிக சேவையைச் செய்ய முடியும் என்பதை நான் நன்கு அறிவேன்.

ஆனால் நான் அரசியலில் நுழையாததற்குக் காரணம், எதிர்மறை அரசியலை நான் விரும்பாததால் தான், என் அம்மாவுக்கும் அதே கருத்துதான். ஏனென்றால் நாம் எல்லோரை பற்றியும் மோசமாகப் பேச வேண்டும், மற்றும் காயப்படுத்த நேரிடும். ஆனால் நான் அதைச் செய்யமாட்டேன், அனைவரையும் மதிக்கிறேன். எனவே, யாராவது எதிர்மறை அல்லாத ஒரு கட்சியைத் தொடங்கினால், நாங்கள் மோசமாகப் பேசவோ அல்லது மற்றவர்களை புண்படுத்தவோ தேவையில்லை என்றால், அவர்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்குச் சேவை செய்ய நான் எனது பங்களிப்பை அளிப்பேன். இந்தியாவில் நேர்மறையான அணுகு முறையைக் கொண்ட அத்தகைய கட்சியை எனது குரு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் மட்டுமே தர முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏனெனில் அவர் ஒரு அரசியல் காரணத்திற்காக இருந்தாலும் யாரையும் காயப்படுத்தவில்லை. எனவே, அவர் கட்சியைத் தொடங்கினாலும் அவர் ஒருபோதும் யாரையும் காயப்படுத்த மாட்டார்.தலைவர் தனது ஆன்மீக அரசியலைத் தொடங்கிய பிறகு, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதால், அவருடன் சேர்ந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்திற்காக எனது சிறந்த சேவையைச் செய்வேன்.சேவையே கடவுள்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு, தியேட்டர், திறப்பு போன்ற பிரச்சனைகள் இன்னும் முற்றிலுமாக தீர்வு காணப்படாமல் உள்ளது. ரஜினியின் அரசியல் கட்சி குறித்தும் எந்த பேச்சும் தற்போது எழாத நிலையில் லாரன்ஸ் இப்படியொரு அறிக்கை வெளியிட்டிருப்பது ஏன்? ஒருவேளை ரஜினி கட்சி தொடங்க முடிவு செய்திருக்கிறார் என்பதை சூசகமாக லாரன்ஸ் வெளிப்படுத்தி இருக்கிறாரா என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

You'r reading ரஜினிகாந்த் கட்சியில் சேர்வேன் பிரபல நடிகர் திடீர் அறிவிப்பால் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை