வெற்றிலையில் இத்தனை நன்மைகளா?

Benefits of betel leaves

by SAM ASIR, Jul 14, 2019, 11:02 AM IST

'வெறும் வாய்க்கு வெற்றிலை கிடைத்ததுபோல' என்று ஒரு கூற்று உண்டு. வெற்றிலை போட்டவர்கள் தொடர்ந்து மென்று கொண்டே இருப்பார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும் இடங்களில் விருந்து முடிந்ததும் முதியவர்கள் வெற்றிலை போட்டுக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

இன்றைய இளம்தலைமுறையினருக்கு மத சடங்குகளை தவிர வேறு எதற்கும் வெற்றிலையின் பயன் தெரியாது. அதற்காக 'பான்' என்ற பெயரில் அதை எப்போதும் குதப்பி, வழியெங்கும், சுவர்கள் மீது எச்சில் துப்ப வேண்டும் என்பதல்ல.

வெற்றிலை தாம்பூலம்:

வெற்றிலை, நீற்றிய சுண்ணாம்பு, பாக்கு இவற்றை சேர்த்து வாயில் போட்டு மெல்லவேண்டும். சிலர் புகையிலையையும் சேர்த்துக் கொள்வர். புகையிலை தரக்கூடிய தீமையை வெற்றிலை தரும் தீமையாக முத்திரை குத்தியதால் அப்பழக்கம் அருகிப்போய்விட்டது.

வெற்றிலையில் அடங்கியுள்ளவை:

வைட்டமின் சி, வைட்டமின் பி1 என்னும் தையமின், வைட்டமின் பி3 என்னும் நியாசின், வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் தேவையான வைட்டமினான ரிபோஃப்ளவின், கரோட்டின், தாவர வேதிகூட்டுப்பொருள்கள், ஆக்ஸினேற்ற தடுப்பு பண்பு கொண்ட பீனோலிக் கூட்டுப்பொருள், ஆக்ஸினேற்ற தடுப்பு குறித்து செல்களுக்கு சமிக்ஞைகளை கடத்தக்கூடிய ஃப்ளவோனாய்டுகள், புரதங்களை இணைக்கக்கூடிய டானின், நைரட்ரஜன் அணுக்களை அடிப்படையாகக் கொண்ட தாவர கரிம கூட்டுப்பொருளான அல்கலாய்டு, ஊக்கமருந்து குணம் கொண்ட ஸ்டீராய்டு ஆகியவை வெற்றிலையில் உள்ளன.

மருத்துவ குணங்கள்

ஆயுர்வேத வைத்தியம் வெற்றிலையை மருத்துவ குணங்கள் கொண்டதாகவே பார்க்கிறது. இதயநோய், அதிகப்படியான கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் இவற்றை தடுக்கக்கூடிய குணம் வெற்றிலைக்கு இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. தீங்கு தரும் நுண்ணுயிர்களுக்கு எதிராக செயல்படுவது, புற்றுநோய், நீரிழிவு பாதிப்பு இவற்றுக்கு எதிராக செயல்படுவது ஆகிய இயல்பு வெற்றிலைக்கு உள்ளது. மனச்சோர்வு, செரிமான கோளாறு, பற்சிதைவு இவற்றையும் வெற்றிலை குணப்படுத்தும். காயங்களை ஆற்றும் பண்பும், தலைவலியை குணப்படுத்தும் ஆற்றலும் வெற்றிலைக்கு உண்டு. ஆஸ்துமாவுக்கு வெற்றிலை நல்ல மருந்தாகும்.

More Health News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை