நீரிழிவும் குழந்தைபேறும்: அதிர்ச்சியூட்டும் தகவல்

ஐவிஎஃப் என்னும் செயற்கை கருவூட்டல் சிகிச்சைக்காக வரும் ஆண்களில் 49 விழுக்காட்டினருக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆறு மாதங்கள் மும்பையில் உள்ள மருத்துவமனை மேற்கொண்ட கணக்கெடுப்பில் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

நீரிழிவு என்பது என்ன?

இரத்தத்தில் குளூக்கோஸ் அதாவது சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் நிலை நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் எனப்படுகிறது. சாப்பிடுவதற்கு முன்பு இரத்தத்தில் 100 mg/dl என்ற அளவு சர்க்கரை இருப்பின் அது இயல்பு நிலை என்றும், 100 mg/dl முதல் 125 mg/dl இருப்பது நீரிழிவு பாதிப்புக்கு முந்தைய நிலை என்றும், 140 mg/dl என்ற அளவுக்கு அதிகமாக இருப்பின் நீரிழிவு என்றும் கருதப்படுகிறது.

சர்க்கரையை வளர்சிதை மாற்றத்திற்கு உள்ளாக்கும் இன்சுலின் என்ற நொதி (ஹார்மோன்) குறைவாக சுரப்பது அல்லது அது உடலால் சரியாக பயன்படுத்தப்படாமல் இருப்பது ஆகிய காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது.
நீரிழிவு எவற்றை பாதிக்கிறது?

நீரிழிவு, இதயம், சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவற்றை பாதிக்கிறது. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடும். சிலவகை நீரிழிவு, விந்தணுக்களை உடைப்பதோடு, ஆண்குறி விறைப்புத்தன்மையில் குறைபாட்டையும், பாலியல் நாட்டத்தில் பாதிப்பையும் உருவாக்குகிறது. மரபணுவையும் நீரிழிவு பாதிக்கிறது. சர்க்கரை நோயினால் கருவுறுதலுக்கு நீண்டகாலம் தேவைப்படுகிறது. கருச்சிதைவும் நிகழ்கிறது.

கணக்கெடுப்பு

அமெரிக்காவில் இனப்பெருக்க மருத்துவத்திற்கான அமைப்பு சார்பில் நடைபெற உள்ள கருத்தரங்கில் சமர்ப்பிப்பதற்காக சராசரியாக 35 வயது கொண்ட 727 ஆண்களிடம் மும்பையிலுள்ள மருத்துவமனை ஒன்று கணக்கெடுப்பு நடத்தியது. அவர்களுள் 62 பேருக்கு (8.5 விழுக்காடு) சர்க்கரை நோய் இருந்தது. 279 பேருக்கு (38.4 விழுக்காடு) சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டன.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 8.8 விழுக்காட்டினருக்கு அதாவது ஏறத்தாழ 7 கோடியே 20 லட்சம் பேருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது.

செயற்கை கருவூட்டல் சிகிச்சைக்கு முன்வரும் தம்பதியர் குறைந்தது ஆறுமாதங்களாவது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்திவிட்டே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நகர்ப்புறங்களும் நீரிழிவும்

நகர்ப்புறங்களில் வாழ்வோருக்கு ஏற்படும் மனஅழுத்தம், உடற்பயிற்சியின்மை, ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய தூக்கமின்மை ஆகியவை உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு குறைபாடுகளுக்குக் காரணமாகின்றன. புகை பிடித்தல், புகையிலை போடுதல் ஆகிய பழக்கங்களை கொண்டோருக்கும் யூரிக் அமில அளவு அதிகமானோருக்கும், இதயநோயின் அறிகுறி கொண்டோருக்கும் நீரிழிவு தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம்.

புகை பிடித்தலை தவிர்ப்பது, உணவினை மெதுவாக சாப்பிடுவது, குறைந்த உப்பு சாப்பிடுதல், ஒழுங்காக உடற்பயிற்சி செய்தல் ஆகியவற்றை கடைபிடிப்பதின் மூலம் இப்பாதிப்புகளிலிருந்து உடலை காத்துக்கொள்ளலாம்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
What-you-can-eat-before-going-to-gym-in-the-morning
காலை உடற்பயிற்சி முன் எவற்றை சாப்பிடலாம்?
Monsoon-food-for-kids
மழையில் ஆட்டம் போடும் குட்டீஸூக்கு என்ன கொடுக்கலாம்?
How-to-lower-your-Cholesterol-level
இப்படி செய்தால் போதும்; கொலஸ்ட்ரால் குறைஞ்சுபோகும்!
Things-to-be-added-every-day-in-diet
அன்றாடம் சாப்பிட வேண்டிய ஐந்து பொருள்கள்
Signs-that-reveal-you-are-stressed
மன அழுத்தம், நன்மையா? தீமையா?
Benefits-of-Flavonoid-rich-Danish-diet
மது மற்றும் புகை பழக்கமுள்ளவரா? இதோ ஒரு நற்செய்தி
How-to-reduce-excess-fat-at-the-side-of-waistline
இடுப்புச் சதை குறைய என்ன செய்யலாம்?
Is-there-any-difference-between-yogurt-and-curd
யோகர்ட் - தயிர்: இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
When-do-you-drink-water
எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா?
How-to-overcome-depression
மனம் கைவசம்; உலகம் உங்கள் வசம்!
Tag Clouds