பர்கர் சாப்பிடும்போது உடலுக்குள் நடப்பது என்ன?

What happens to your body after eating a burger?

by SAM ASIR, Jul 19, 2019, 22:54 PM IST

'பர்கர் இல்லாமல் வாழ்க்கை இல்லை' என்ற அளவுக்கு அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ளது. ஃப்ரண்ட்ஸ் ஒன்றாக சேர்ந்தாலே பர்கர் பார்ட்டிதான்! யாருமேயில்லால் தனியாக இருந்தால், தனிமையை கடப்பதற்கு 'அண்ணனுக்கு பர்கர் ஒண்ணு பார்சல்' என்று ஆர்டர் செய்து விடுகிறோம். எப்போதும் அல்ல; எப்போதாவது பர்கர் சாப்பிடுவது கூட ஆரோக்கியத்திற்குக் கேடுதானாம்.

பர்கர்: ஓர் அறிவியல் பார்வை!

பர்கர் போன்ற நொறுக்குத் தீனிகளில் தேவைக்கு அதிகமான கலோரி என்னும் ஆற்றல், கொழுப்பு மற்றும் சோடியம் இருப்பதாகவும், அவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பதாகவும் அறிவியல் கூறுகிறது.

பர்கரில் இருப்பவை:

ஒரே ஒரு ஹாம்பர்கரில்

கலோரி - 500

கொழுப்பு - 25 கிராம்

கார்போஹைடிரேட் - 40 கிராம்

சர்க்கரை - 10 கிராம்

சோடியம் - 1,000 மில்லி கிராம் ஆகியவை அடங்கியிருக்கின்றன.

பர்கர் சாப்பிட்டதும் நடப்பது என்ன?

பர்கரை கடித்துச் சுவைத்த பதினைந்தாவது நிமிடத்தில் உடலில் சர்க்கரையின் அளவு தாறுமாறாய் உயர்கிறது. சர்க்கரையின் அளவு உயர்ந்ததும், இன்சுலின் சுரப்பதற்கான கட்டளையை உடல் பிறப்பிக்கிறது. அதிக இன்சுலின் சுரந்ததும், அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் அதிகமாக பசிக்கிறது.

இதுபோன்று மீண்டும் மீண்டும் நடப்பதால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. ஒரே நேரத்தில் அதிக கலோரி கொண்ட உணவை உண்பதால் உடல் செல்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படுகிறது.

இதயத்திற்கு இதமானதா?

பூரித கொழுப்பு அதிகம் உள்ள உணவினை சாப்பிடுவது உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும். நல்ல ஆரோக்கியமான ஆண்களுக்கு பூரித கொழுப்பு அடங்கிய உணவினை தொடர்ந்து அளித்து வந்தால், சுத்தமான இரத்தத்தை உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லும் தமனிகள் பாதிக்கப்படுவதாகவும், அதனால் தமனிகள் விரிவடையும் தன்மையை இழப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் பிற்காலத்தில் இதய நோய்கள் வரக்கூடிய வாய்ப்பு உருவாகிறது.

சோடியம் அதிக அளவில் உடலில் சேர்வதால், இரத்த நாளங்களும் பாதிப்புறுகின்றன. ஆகவே, அடுத்த முறை பர்கர் சாப்பிடுவதற்கு முன்பு, ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்!

You'r reading பர்கர் சாப்பிடும்போது உடலுக்குள் நடப்பது என்ன? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை