இளமை மாறாமலிருக்க இவற்றை சாப்பிடுங்க!

by SAM ASIR, Aug 7, 2019, 17:01 PM IST

'மனசுல இளமையாதான் இருக்கேன்' என்று கூறினாலும் தோற்றத்தை இளமையாக காட்ட பலர் முயற்சி செய்வர். வயதாகும்போது உடல் செல்களும் முதிர்வடைகின்றன. இது மீட்சியடையாத நிலை என்பதால் உடல் முதுமை தோற்றம் பெறுகிறது. இளமையாக காட்சியளிக்க எத்தனை எத்தனையோ செயற்கை அழகு பொருள்களை மக்கள் பயன்படுத்துகின்றனர்.


இயற்கையான காய்கறி, பழங்களை உண்பதன் மூலம் இளமையான தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள இயலும். 'நல்ல கொழுப்பு' அடங்கிய உணவு பொருள்களை உண்பதால் சருமம் பொன்போல மிளிரும்.

வைட்டமின் மற்றும் தாது சத்துகள் அடங்கிய உணவு:

சில பழங்கள் மற்றும் காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டால் முதுமையை தள்ளிப்போட முடியும். பப்பாளி, தர்பூசணி, அன்னாசி போன்ற பழங்களும பிரெக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் பாக் சாய் என்னும் சீன முட்டைகோஸ் வகை காய்கறியையும் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் என்றும் இளமையாக காட்சியளிக்கலாம்.

ஆரோக்கியமான உணவு:

அழற்சியை தடுக்கக்கூடிய ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவு பொருள்களை உண்டால் இளமை தோற்றத்தை காத்துக்கொள்ளலாம். வாதுமை, முந்திரி போன்ற கொட்டை வகை உணவு பொருள்கள், அவகாடோ மற்றும் தேங்காயெண்ணெய் ஆகியவை இளமையை காக்கும்.

ஆக்ஸிஜனேற்ற தடுப்பு உணவு:

ஆப்பிள் பழத்தில் ஃபிஸ்டின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது பழுதடைந்த செல்களை சீர்ப்படுத்தும்.

புரதம்:

கொலஜன் என்னும் ஒரு வகை புரதம், செல்கள் முதுமையடைவதை தடுக்க உதவும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் இறைச்சி, மீன், முட்டை, பன்றி இறைச்சி, சோயாபீன்ஸ் ஆகியவற்றில் இப்புரதம் உள்ளது.

இந்த உணவு பொருள்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் சரும அழழு, கூந்தல், ஞாபகசக்தி மற்றும் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பதாக கூறுகின்றனர். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!


Leave a reply