இனி வெள்ளை நிற காஷ்மீர் பெண்களை மணக்கலாம் பாஜக எம்எல்ஏ சர்ச்சை

Now anyone can marry Kashmirs white skinned women, UP BJP MLAs speech video viral

by Nagaraj, Aug 7, 2019, 15:01 PM IST

இனி வெள்ளை நிற காஷ்மீர் அழகுப்பெண்களை திருமணம் செய்து கொள்ள தடை இல்லை என்பதால், கட்சித் தொண்டர்கள் பலர் ஆர்வமாக உள்ளதாக உ.பி.யைச் பா.ஜ.க எம்எல்ஏ ஒருவர் குஷியாக பேசியுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். உ.பி.மாநிலத்தின் முஷாபர்நகரில் உள்ள கதவுலி பகுதியிலும் பாஜக சார்பில் மக்களிடையே கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அக் கட்சியின் எம்எல்ஏவான விக்ரம் சிங் சைனி என்பவர், காஷ்மீர் பெண்கள் குறித்து படுகுஷியாக பேசியுள்ளார்.

காஷ்மீர் பெண்களை, இனி திருமணம் செய்து கொள்ள தடையேதும் இல்லை என்பதால் எங்கள் கட்சியில் திருமணம் ஆகாமல் உள்ள தொண்டர்கள் பலர் ஆர்வமாக உள்ளனர்.
இதற்கு முன் காஷ்மீர் பெண்கள் மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. காஷ்மீரைச் சேர்ந்த பெண் ஒருவர் உ.பி.யைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவரின் குடியுரிமை பறிக்கப்படும். இந்திய குடியுரிமையில் இருந்து காஷ்மீர் குடியுரிமை மாறுபட்டு இருக்கும். தற்போது இந்த தடைகள் நீக்கப்பட்டதால் பாஜகவில் உள்ள இஸ்லாமிய தொண்டர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

காஷ்மீரில் உள்ள வெள்ளையான பெண்களை அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதால் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை அவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்து, முஸ்லிம் என ஒவ்வொருவரும் கொண்டாடுகிறார்கள். ஒட்டு மொத்த நாடே இதனை கொண்டாடி வருகிறது என்று பேசியுள்ளார். பாஜக எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி பேசிய இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களிலும் படு வேகமாக வைரலாக பரவி வருகிறது. அவருடைய இந்தப் பேச்சு ஒரு பக்கம் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இது போன்று சர்ச்சைக்குரிய வகையில் விக்ரம் சிங் பேசுவது இது முதல் தடவையல்ல. நாட்டில் பாதுகாப்பு இல்லாமல் உணர்வதாக கூறுபவர்கள் தான் நாட்டின் அச்சுறுத்தல். அவர்கள் வீடு மீது குண்டுகளை எறிய வேண்டும் என 2 வருடங்களுக்கு முன் இவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது காஷ்மீர் பெண்களை யாரும் மணக்கலாம் என்று பேசியது பற்றி விக்ரம் சைனியிடம் கேட்டதற்கு, இதில் தவறு ஏதும் இல்லை. இனி யார் வேண்டுமானாலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். இது தான் உண்மை. இதைத் தான் நானும் சொன்னேன். இது காஷ்மீர் மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம். இந்த சுதந்திரத்தை கொண்டாடத்தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். காஷ்மீரில் இருக்கும் அனைவரும் அழகானவர்கள் என்பதால் இப்படிப் பேசினேன். நானும் கூட காஷ்மீரில் வீடு வாங்க விரும்புகிறேன் என்று படு குஷியாக தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம்: காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த பூசல் ; அமைதி காக்கும் ராகுல் காந்தி

You'r reading இனி வெள்ளை நிற காஷ்மீர் பெண்களை மணக்கலாம் பாஜக எம்எல்ஏ சர்ச்சை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை