பற்களின் நிறத்தை பாதுகாப்பது எப்படி?

How to protect White Teeth

by Mari S, Sep 9, 2019, 11:43 AM IST

வெள்ளை நிறத்தில் பள பளவென பற்கள் மின்னுவது சில விளம்பரங்களில் மட்டும்தான் காணமுடிகிறது. பெரும்பாலும், பலரது பற்கள் மஞ்சள் கறையுடனும் பாசி நிறத்திலும் தான் தோற்றம் அளிக்கிறது. பற்களை பாதுகாப்பதும் பற்களின் நிறத்தை பாதுகாப்பதும் மிகவும் அவசியமான ஒன்று.

பளிங்கு போன்ற பல், முத்து போன்ற பல் என சொல்வதை அனைவராலும் எளிதில் சாதித்து காட்ட முடியும். ஆனால், நமது உணவு பழக்க வழக்கங்கள், பற்களின் நிறத்தையும், உறுதியையும் உருக்குலையச் செய்கின்றன.

ஆப்பிள், காபி, டீ, குளிர்பானங்கள் மற்றும் கிழங்கு வகை உணவுகளை உட்கொண்ட பின்னர், பற்களை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும், பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொண்டு, நமது ஈர்களை வலுவிழக்கச் செய்கின்றன. மேலும், ஃபுளோரைட் நிறைந்த நீர் மற்றும் பேஸ்ட்களை பயன்படுத்துவதாலும், பற்களின் உறுதியில் சிக்கல் ஏற்பட்டு விரைவில் பற்சிதைவு ஏற்படுகிறது.

இந்தியர்கள் மட்டுமல்ல உலகளவில் பல நாட்டு மக்களும், ஆரோக்கியத்துக்கான செலவில் பற்களை பராமரிப்பதில் 40% செலவு செய்வதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு முடிவுகள் தெரிவித்திருந்தன.

பற்கள் மட்டும் ஈர்கள் வலுவாக இருக்க வேண்டும் என்றால், தினமும் இருவேளை பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். மிகவும், குளிராகவோ அல்லது சூடாகவோ எதையும் நாம் உட்கொள்ளக் கூடாது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் போது, அது பற்களின் உறுதித் தன்மையை நிலைகுலையச் செய்து, பற்களை சீக்கிரத்தில் சேதப்படுத்தி விடுகின்றன.

புகைப்பிடிப்பது, மதுகுடிப்பது முக்கியமாக புகையிலை பொருட்களை பயன்படுத்துவர்களுக்கு விரைவில் பற்களின் நிறம் மற்றும் உறுதி சீர்குழைந்து விடுகிறது.

உமிழ்நீர் சுரப்பை சீராக வைத்துக் கொள்ளும் சிறிய பழக்கத்தினால், பற்களின் நிறமாற்றத்தை தவிர்க்கலாம்.

You'r reading பற்களின் நிறத்தை பாதுகாப்பது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை