கண்ணாடியில் நாம் முகம் பார்க்கும்போது, திடீரென தென்படும் சரும சுருக்கங்களைக் கண்டால் மனம் மிகவும் வருத்தப்படும் அல்லவா? சருமத்தில் சுருக்கங்கள் உண்டாவதற்கு வயதும் ஒரு காரணம் என்றாலும், நாம் இளமைப் பருவத்தில் கண்ட அதே அழகிய சருமத்தை இன்னும் சில ஆண்டுகளுக்கு நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
நம் சரும அழகை தக்க வைத்துக் கொள்ள கண்டிப்பாக பராமரிப்பு என்பது அவசியம். எப்படி என்றால், நம் சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்துக் கொள்வதனால் முகம் சுருக்கமாவதில் இருந்து தப்பிக்கலாம்.
அதனால், முகத்தின் முதல் பராமரிப்பாக தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது பழங்களாகவும், பழச்சாறாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இதைத்தவிர, சில வீட்டு வைத்தியங்கள் மூலமும் நம் சருமத்தை பாதுகாக்க முடியும். அவற்றில் அரிசி தண்ணீர் பேஸ் மாஸ்க்காக பயன்படுத்தும்போது அது எந்த வகையில் செயல்படுகிறது என்று பார்ப்போம்..
அரிசி தண்ணீர்:
அரிசியை நன்றாக ஊறவைத்து வடிகட்டும் தண்ணீர் சருமத்திற்கும், முடிக்கும் நிறைவான சத்து தருகிறது. இது, சரும சுருக்கத்திற்கும் நல்ல பலனைக் கொடுக்கிறது.
கிண்ணத்தில் அரிசி தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். ஒரு பேப்பர் டவளில் கண்கள், மூக்கு, வாய் பகுதிகள் வெளிப்படும் வகையில் வெட்டிக் கொள்ளவும்.
பேப்பர் டவளை அரிசி தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவிட்டு, பின் எடுத்து முகத்தில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு மாஸ்க்காக போட்டு எடுக்கவும். முகம் கழுவவும்.
இந்த பேஸ் மாஸ்க்கை தினமும் பயன்படுத்தி வந்தால் சரும சுருக்கம் மறையும், முகமும் பொலிவுப் பெரும்.