மேனி பொன்னிறமாகும்... மூலநோய் குணமாகும்... உடல் சூடு குறையும்... பொன்னாங்கண்ணி கீரையின் பயன்கள்

benefits of ponnaganni keerai in tamil

by SAM ASIR, Sep 30, 2020, 21:44 PM IST

பொன்னாங்கண்ணி கீரையில் சீமை பொன்னாங்கண்ணி நாட்டுப் பொன்னாங்கண்ணி என்று இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணிக்கு பல அருங்குணங்கள் கொண்டது.

பொன்னாங்கண்ணி கீரையின் தண்டுகளைக் கிள்ளி மண்ணில் ஊன்றி வைத்தாலே கீரை செடி நன்றாக வளர்ந்து விடும். இதனை வீட்டிலேயே வளர்க்கலாம்.

பொன்னாங்கண்ணி கீரையில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, தாது சத்து,இரும்புச் சத்து, சுண்ணாம்பு சத்து (கால்சியம்), பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் 'ஏ' மற்றும் 'சி' போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

இதைச் சாப்பிட்டால் உடல் பொன்போல பளபளப்பாகும் என்கின்றனர். 'கீரைகளின் ராணி' என்று சொல்லத்தக்க அளவுக்கு பல மருத்துவ குணங்களை கொண்டது பொன்னாங்கண்ணி.

கண்பார்வைக்கு மிகவும் நல்லது. சருமத்துக்கு மிகவும் நல்லது. மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

உடல் சூடு

பொன்னாங்கண்ணி கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணெயுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண் எரிச்சல், உடல் சூடு போன்றவை நீங்கும். உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. பலவித நோய்களையும் தீர்க்கும் இந்தக் கீரையை பகலில் உண்பதுதான் நலன் தரும். ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சாப்பிட்டு விட்டு பலன் இல்லையே என நினைக்கக் கூடாது. வாரம் இரண்டு நாட்கள் எனக் குறைந்தது 12 மாதங்கள் முதல் 23 மாதங்கள் வரை சாப்பிட வேண்டும். அப்போதுதான் அது உடலில் சார்ந்து நோய் நொடிகளை ஓட ஓட விரட்டும்.

உடல் எடை

உடல் எடை குறைய பொண்ணாங்கன்னி கீரை உதவுகிறது. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

பொன்னாங்கண்ணி கீரையை துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடைக்கூடும். பொன்னாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால், உடல் வலிமை பெரும். எலும்புகள் உறுதியாகும்.

வாய் துர்நாற்றம்

வாயில் இருந்து வரும் துர்நாற்றம் மற்றவர்களுடன் பழகுவதற்கு தயங்க செய்யும். பொன்னாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் போகும்.

புத்துணர்வு

பொன்னாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட்டு வந்தால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது. இதனால் நாம் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது.

மூல நோய்

பொன்னாங்கண்ணி கீரை மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

கண் பார்வை

பொன்னாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை துல்லியமாக தெரியும். இரவு சரியாக தூக்கமில்லாத காரணத்தாலும், நீண்ட நேரம் செல்போன், கணினி போன்ற எலட்ரானிக் சாதனங்களைப் பார்ப்பதாலும் கண்கள் சிவந்து காணப்படுகிறது. பொன்னாங்கண்ணி கீரையைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்னை நீங்கும்.

இரத்த சுத்திகரிப்பு

பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக நீரில் இட்டு கழுவி, சிறிது சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

சரும அழகு

பொன்னாங்கண்ணி கீரை தங்கம் போன்ற சருமத்தை தரும் ஆற்றல் கொண்டது. இந்தக் கீரையைச் சாப்பிட்டால் அழகு மேம்படும்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Health News

அதிகம் படித்தவை