நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் கூடும் இடங்களான வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள் , பூங்காக்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது. சென்ற 5 மாதத்துக்கும் மேல் கொரோனா ஊரடங்கு தொடர்கிறது. ஜூன் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசால் அறிவித்து வருகிறது. தற்போது 4 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்றோடு முடிவுக்கு வந்ததையடுத்து மத்திய அரசு புதிய தளர்வுகள் அறிவித்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் அக்.31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அதேசமயம் சினிமா தியேட்டர்களை 50 சதவிகித இருக்கைகளுடன் அக்.15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. பொழுது போக்கு பூங்காக்கள் நீச்சல் குளங்கள் திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால் சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட ஊரடங்கு பற்றிய தளர்வு அறிவிப்பில் அக்டோபர் முழுவதும் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடையாது என தெரிவித்திருந்தது. மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி சினிமா தியேட்டர்கள் அக்டோபர் 15ல் திறக்க அனுமதி கிடைக்கும் என்பது இனிதான் தெரியவரும்.