உங்களுக்கு சக்கரை நோய் இருக்கா?? அப்போ வேப்பம் டீ குடிங்க..நன்மைகள் எராளம்.

by Logeswari, Oct 12, 2020, 19:41 PM IST

வேப்பிலையில் இயற்கையாகவே கிருமி நாசினிகள் உள்ளது.இது யாவரும் அறிந்த உண்மை. அதனால் தான் வேப்பிலையை வீடு முழுவதும் கட்டி நோய்களை உள்ளே வரவிடாமல் தடுக்கிறோம். அதே போல் வேப்பிலையை சாப்பிட்டு வந்தால் கொடிய நோயான சர்க்கரை நோயை வென்றுவிடலாம். தினமும் வேப்ப இலையை இரண்டு அல்லது மூன்று சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். மற்றும் உடலில் உள்ள அளவு கடந்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய்க்கு உடனடியாக தீர்வு காண வேப்பம் டீயை குடித்து வாருங்கள். சரி வேப்பிலையை கொண்டு எப்படி டீ போடுவது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:-

வேப்ப இலை தூள்-1 ஸ்பூன்

தண்ணீர்-1 1/2 கப்

இலவங்கப்பட்டை தூள்-1/2 ஸ்பூன்

டீ தூள்-1 ஸ்பூன்

செய்முறை:-

முதலில் வெப்பங்கொழுந்தை மிக்சியில் தூளாக அரைத்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலை தூள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் ஆகியவை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

தேனீராக குடிக்க விரும்புபவர்கள் டீ தூளை தண்ணீரில் சேர்த்துக் கொதித்து வைக்கவும்.

10 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அனைத்து விட வேண்டும்.

இந்த டீயை தினமும் குடித்து வந்தால் சர்க்கரை நோயிக்கு உடனடி தீர்வு காணலாம்..

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Health News

அதிகம் படித்தவை