தென்காசி வட்டாரத்தில் மழை. குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு.

by Balaji, Oct 12, 2020, 20:37 PM IST

தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மிதமான மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த பெரு மழையால் குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

புராண காலத்தில் எனினும் வந்திருந்த ஒருசில சுற்றுலா பயணிகள் அருவியைப் தூரத்திலிருந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Tamilnadu News