கோவிட்-19 பாதிப்புள்ளோருக்கு முடி கொட்டுவது ஏன்?

why corona patient overcomes hairfall issue

by SAM ASIR, Oct 24, 2020, 21:26 PM IST

கொரோனா தொற்று உலகம் முழுவதையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், பொருளாதாரம், தொழில்துறை, தனி மனித வாழ்க்கை என்ற அதன் பாதிப்பு எட்டாத துறைகளே இல்லை எனலாம். கோவிட்-19 கிருமிக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. ஆனால், அக்கிருமியின் பாதிப்பு பல்வேறு பரிமாணங்களில் வெளிப்பட்டுக்கொண்டே உள்ளது.

இலேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகியவையே கோவிட்-19 பாதிப்பின் அறிகுறிகளாக கூறப்பட்டன. ஒரு கட்டத்தில் கோவிட்-19 பாதிப்புள்ளவர்களுக்கு முடி உதிரும் பாதிப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. கோவிட்-19 பாதிப்புக்கும், முடி உதிர்வதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுந்துள்ளது.

முடி உதிர்தல்

கோவிட்-19 கிருமி பாதிப்பை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வரும் ஆராய்ச்சியாளர்கள், கற்பனை செய்து பார்க்க இயலாத பாதிப்புகளை இக்கிருமி உண்டாக்குவததை அறிய நேருகிறது. குறிப்பாக, கோவிட்-19 கிருமி பாதிப்பால் நெடுங்காலம் அவதிப்பட்டவர்களுக்கு முடி உதிர்வதாக கூறப்படுவதையும் அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

இண்டியானா பல்கலைக்கழகத்தின் மருத்துவ புலத்தை சேர்ந்த டாக்டர் நடாலியே லாம்பர்ட், சர்வைவர் கார்ப் என்ற ஃபேஸ்புக் குழுவுடன் இணைந்து ஒரு கணக்கெடுப்பை செய்துள்ளார். அதில் கோவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியும் 25 அறிகுறிகளுள் முடி உதிர்தலும் ஒன்று என்பது தெரிய வந்தது. கொரோனாவின் பாதிப்பு அதிக நாள்கள் தெரிந்த 1500 பேரிடம் செய்யப்பட்ட இக்கணக்கெடுப்பில் குமட்டல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளைக் காட்டிலும் முடி உதிர்தல் அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது.

கோவிட்-19 பாதிப்புள்ளோருக்கு ஏன் முடி உதிர்கிறது?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் முடி உதிர்கிறது என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழுந்துள்ளது. அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படாவிட்டாலும் நோயின் காரணமான மன அழுத்தமும், மனக்கலக்கமும் முடி உதிர்தலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவசர நிலை பதற்றம், அதிர்ச்சி மற்றும் நோய் காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் நோய் பாதிப்பு காலத்தில் ஊட்டச்சத்து உணவு குறைந்து போவதாலும் முடி உதிரலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், இவை எதுவும் இன்னும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

என்ன செய்யலாம்?

கோவிட்-19 பாதிப்பினால் முடி உதிர்தல் தற்காலிக பாதிப்பாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. உணவே முக்கியமான தீர்வாக கூறப்படுகிறது. வைட்டமின் டி மற்றும் இரும்புச் சத்து கொண்ட ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். கோவிட்-19 கிருமியை உங்கள் உடல் வென்றுவிட்டால் ஏனைய பாதிப்புகள் நாளடைவில் சரியாகிவிடும்.

More Health News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை