ஒரு வழியாக கண்ணம்மாவுக்கு குழந்தை பிறந்துவிட்டது.. அதுவும் இரட்டை குழந்தையாம்..! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..

what happened in bharathi kannamma serial promo

by Logeswari, Oct 24, 2020, 21:10 PM IST

தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் வருவது தான் பாரதி கண்ணம்மா. கடந்த ஒரு மாத காலமாக எல்லா சீரியலையும் பின்னுக்கு தள்ளி விட்டு உச்சியில் நம்பர் 1 சீரியலாக விளங்குகிறது.

இதற்கு காரணம் அந்த சீரியலில் இடம்பெறும் கண்ணம்மாவின் கதாபாத்திரம் தான்.. நிறைமாத கர்ப்ப காலத்தில் கணவனின் சந்தேகத்தால் வீட்டை விட்டு வெளியேறி துணிச்சலான பெண்மணியாகவும், பெண்ணுக்கு ஒரு இலக்கணமாகவும் வாழ்ந்து வருகிறார் கண்ணம்மா. அப்படி இருக்கும் வேளையில் கண்ணம்மாவின் எதிரி செய்யும் சூழ்ச்சிகளை தாண்டி எப்படி குழந்தையை பெற்று எடுக்கிறார் என்பது கதை களமாக கொண்டு மிகவும் விறு விறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தமிழில் நம்பர் 1 சீரியலாக திகழ்ந்ததால் இந்த சீரியலை தொகுத்து வழங்கும் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், நடிகைகள் என எல்லோரும் ஒன்று திரண்டு கேக் வெட்டி மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள்.

மக்களுக்கு கண்ணம்மாவின் கதாபாத்திரம் மிகவும் பிடித்துவிட்டது.வாழ்ந்தால் கண்ணம்மா போல் வாழ வேண்டும் என்று சில பெண்களின் மனதில் ஒரு தூண்டுகோளாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் கண்ணம்மாவின் கணவரே பிரசவம் பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் கையில் எடுத்து பொழுது பாரதி அறியாமலையே அவரது கண்ணில் இருந்து தண்ணீர் தாரை தாரையாக கொட்டுகிறது. பிறகு கண்ணமாவுக்கு இரண்டாவது முறையாக பிரசவ வலி ஏற்பட கண்ணமாவின் மாமியார் பிரசவம் பார்க்கிறார். அப்பொழுது அழகான குழந்தையை தொட்டு கையில் அள்ளி முதல் முத்தத்தை பொழிந்தார் கண்ணமாவின் மாமியார். மேலும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை