இந்த 3 உணவுகளை சாப்பிட்டால்.. ஒரே வாரத்தில் தொப்பையை ஈசியாக குறைத்து விடலாம்..!

by Logeswari, Oct 27, 2020, 19:35 PM IST

உடலை குறைப்பது என்பது அவ்வளவு ஈஸி இல்லை.. பல வகையான டயட்டை பின்பற்றினாலும் அதற்கான தீர்வு எதிர்பார்த்த அளவுக்கு கிடைப்பதில்லை. உடலை குறைக்கும் பொழுது உணவு வகை மிகவும் முக்கியமானது. அதுவும் நாம் உண்ணுகின்ற உணவு நம் உடலுக்கு ஆரோக்கியம், சத்துக்கள் போன்றவற்றை கொடுப்பதாக இருக்க வேண்டும். சிலருக்கு உடம்பு ஒல்லியாக இருக்கும் ஆனால் வயிறு மட்டும் தொப்பை போட்டு குண்டாக இருக்கும். அப்படிப்பட்ட தொப்பையை 3 வகையான உணவுகளை சாப்பிடுவது மூலமாக ஒரே வாரத்தில் குறைத்து விடலாம். சரி வாங்க அந்த 5 உணவு எவை என்பதை பார்க்கலாம்..

ஆப்பிளின் நன்மை:-
அனைத்து பழங்களை விட ஆப்பிளில் அதிக சக்தி உள்ளது. இதில் உடம்பில் உள்ள தேவையான கொழுப்புகளை குறைக்க மிகவும் உதவுகிறது. இதில் பக்கவிளைவுகள் ஏதும் இல்லாமல் வயிற்று தொப்பையை தட்டையாக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது மூலம் டாக்டரை பார்க்க தேவையில்லை என்று சொல்லுவார்கள். இது சாப்பிடுவது மூலமாக இடுப்பில் உள்ள எலும்புகளும் சக்தி பெறுகிறது. செயற்கையான வழி முறைகளை பின்பற்றி பக்கவிளைவுகளை பெறுவதைவிட சத்தான பழங்களை சாப்பிட்டு ஆரோக்கியமான முறையில் வயிறு தொப்பையை குறைக்க ஆப்பிள் உதவுகிறது.

தயிரின் நன்மைகள்:-
உடலை குறைப்பதற்கு வீட்டில் தயாரித்த சுத்தமான தயிரை எடுத்துக்கொள்ளுங்கள். தயிரில் உடம்பில் உள்ள கொழுப்புகளை அழிக்க கூடிய சத்துக்கள் உள்ளது. தயிரில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துகள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதனை தினமும் ஒரு வேளையாவது சாப்பிடும் உணவில் கலந்து கொள்வது அவசியமானது. இல்லையென்றால் வெறும் தயிரை கூட அப்படியே சாப்பிடுவதால் உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் உதவுகிறது. தயிரில் பெர்ரி மற்றும் பாதாமை கலந்து சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க ஈசியாக வழிவகுக்கிறது.

நட்ஸின் நன்மைகள்:-
தினமும் வகை வகையான நட்ஸை சாப்பிட வேண்டும். இது மூலம் நமக்கு அதிக ஊட்டச்சத்து கிடைப்பதால் நமக்கு சீக்கிரமாக பசி உணர்வு ஏற்படாது. அதனால் உடல் எடையை குறைக்க எண்ணுபவர்கள் நட்ஸை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது. இதில் கொழுப்பை குறைக்கும் ஆரோக்கிய சத்து உள்ளது என்பதை ஆராய்ச்சி மூலம் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த மூன்று பொருள்களையும் தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் இடுப்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்து வயிற்றின் தொப்பையை குறைக்கிறது.

More Health News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை