உன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை!

Marlon Samuels distasteful comment to Stokes remarks

by Sasitharan, Oct 27, 2020, 19:46 PM IST

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஸ்டோக்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் மார்லன் சாமுவேல்ஸ் இடையே 2015ல் ஏற்பட்ட சண்டை 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதுவும் மோசமான முறையில் இருவரும் விமர்சிக்கும் அளவுக்கு சென்றுகொண்டிருக்கிறது. 2015ல் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டோக்ஸ் அவுட் ஆகி வெளியேறும்போது, அவரை நோக்கி சாமுவேல்ஸ் சல்யூட் அடித்ததே பிரச்சனையின் ஆரம்ப புள்ளி. அப்போது ஆரம்பித்த பிரச்னை தீரா பகையாகி வருகிறது. இதன்பின் ஒவ்வொரு முறையில் இருவரும் சந்தித்து கொள்ளும்போது முறைத்துக் கொண்டு வருகிறார்கள். டி20 உலகக் கோப்பையின் போது கொல்கத்தா மைதானத்தில் இருவரும் முட்டிக்கொண்டனர்.

இதற்கிடையே, தற்போது நடைபெறும் ஐபிஎல் சீசனுக்காக ஸ்டோக்ஸ் துபாய் வந்தபோது கொரோனா நோய்க்கு எதிராக தனிமைப்படுத்தலில் இருந்தார். பின்னர் வெளியே வந்தபோது தனிமைப்படுத்தல் குறித்து பேசியவர், ``எனது மோசமான எதிரி மார்லன் சாமுவேல்ஸ் கூட இது மாதிரியான தனிமைப்படுத்தலை விரும்பமாட்டார்" எனப் பேசியிருந்தார். இந்தபேட்டிக்கு பதிலளித்த சாமுவேல்ஸ், ``உன் மனைவியை 14 நாட்கள் தா" என்று மோசமான முறையில் விமர்சித்திருக்கிறார். இது இப்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

More Cricket News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை