ஜிம் தேவையில்லை.. டயட்டை எப்படி ஆரோக்கியமாக கடைபிடிக்க வேண்டும்?? வாங்க பார்க்கலாம்..

by Logeswari, Nov 9, 2020, 14:26 PM IST

தற்பொழுது இருக்கும் காலகட்டங்களில் உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியம். உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள சிலர் ஜிம் செல்கின்றனர், சிலர் வீட்டிலே டயட் என்ற பெயரில் எடையை குறைக்க ஆரோக்கிய உணவுகளை தவிர்த்து சத்து இல்லாத சக்கையை மட்டும் தான் சாப்பிட்டு வருகின்றனர். இதனால் உடல் எடையை குறைத்தாலும் எந்த விதத்திலும் பயனும் இல்லை என்பது தான் உண்மை. வருக்காலத்தில் அதிக பக்க விளைவுகளை உண்டாக்கும். ஜிம்மில் நாம் உடல் பயிற்சி செய்தவுடன் அடுத்த நாளைக்கு தேவையான ஆரோக்கிய உணவுகளை எடுத்து கொள்ளவும். வீட்டில் டயட் மேற்கொள்பவர்கள் சத்தான பொருள்களை கையாண்டு உடலை குறைக்க வேண்டும்.. சரி வாங்க சரியான வழிமுறை பயன்படுத்தி எப்படி உடல் பருமனை குறைப்பது பற்றி பார்ப்போம்..

சத்தான உணவு முறைகள்:-
சத்து என்றாலே அது பழங்கள் மற்றும் காய்கறிகளில் தான் அதிகமாக கொட்டி இருக்கின்றது. அரிசியை சமைத்து உண்பதை விட முழுக்க காய்கறிகள் மட்டும் பழங்கள் சாப்பிட்டாலே போதுமானது. இதில் இருக்கும் சத்துக்களால் நாம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வழிவகுக்கிறது. இது போல் ஆரோக்கியமான பொருள்களை சாப்பிடுவதால் பசி உணர்வு அதிகமாக ஏற்படாது.இதனால் மிக எளிதாக உடல் பருமனை குறைத்து விடலாம்.

முளைவிட்ட பயிர்கள், பயிர் வகைகள், தானிய பொருள்கள், ராகி, கோதுமை ஆகிய பொருள்களை அடிக்கடி எடுத்து கொள்ளவும். இந்த பொருள்கள் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க உதவுகின்றது. அசைவம் சாப்பிடுபவர்கள் தினமும் முட்டை சாப்பிட வேண்டும்.இறைச்சிகளை பொறிப்பதைவிட குழம்பாக வேக வைத்து சாப்பிடுவது உடலின் செரிமானத்துக்கு நல்லது.

சுத்தமான பாலால் ஆனா தயிர், மோர் ஆகியவற்றை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். சாப்பிட்டு முடித்தவுடன் உடனே தூங்க கூடாது அப்படி தூங்கினால் உடல் எடை சீக்கிரமாக எற அதிக வாய்ப்பு உள்ளது. உணவை மூன்று வேளைகளில் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டியது மிக அவசியமானது.

உண்ண கூடாத உணவுகள்:-
நாம் உடலை குறைக்க வேண்டும் என்றால் மைதாவை அறவே தவிர்க்க வேண்டும். நொறுக்கு தீணிகளான இனிப்பு, சிப்ஸ், நூடுல்ஸ், பரோட்டா, சமோசா, ஐஸ்கிரீம் ஆகியவை நீக்க வேண்டும்.பிட்ஸா, பர்கர் ஆகியவையில் வெறும் சக்கை தான் உள்ளது இந்த பொருள்களில் இருந்து எதுவும் 1% கூட உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தராது. ஆகவே உடலை குறைக்க நினைக்கும் எல்லோரும் குறிப்பிட்ட பொருள்களை தொட கூட கூடாது..

You'r reading ஜிம் தேவையில்லை.. டயட்டை எப்படி ஆரோக்கியமாக கடைபிடிக்க வேண்டும்?? வாங்க பார்க்கலாம்.. Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை