கோரிக்கை வேண்டாம் : தியேட்டர்களை திறக்கவிடுங்கள் அமைச்சர் வேண்டுகோள்

திரைப்பட வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் இப்போது கோரிக்கை வைக்கக்கூடாது. திரைப்படம் வெளியிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டுக்கொண்டார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது :கொரோனா காலகட்டத்தில் 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது திறக்கப்படுகிறது.

இந்த நேரத்தில் வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைப்பது சரியான ஒன்றல்ல. படங்களை வெளியிடுவதற்கு இரு தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். நாளை
திரையரங்குகள் திறக்கப்படுவதால் இருதரப்பும் பேசி சுமுக தீர்வு காணப்பட வேண்டும் அது இல்லாத பட்சத்தில் இன்னும் இரு தினங்களில் சென்னையில் தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்து இருதரப்பினரையும் அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணப்படும்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பிடிபடும்போது தொடர்ந்து தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களை மீட்டு வந்து இருக்கிறது அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை அழிக்க வேண்டுமென்ற என இலங்கை நீதிமன்றம் உத்தரவு குறித்தும் தமிழக அரசு மத்திய அரசு கவனத்திற்குக் கொண்டுசெல்லும் பாஜக தலைவர் வேல்முருகன் தமிழகத்தில் நாங்கள் கைகாட்டும் நபர் தான் அடுத்த முதல்வர் என்று சொல்லியிருக்கிறார்.அவர் தனது கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிச் சொல்லி வருகிறார்.யார் முதல்வர் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி தான் அமையும். எங்களின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என ஏற்கனவே அறிவித்து விட்டோம் என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
5-killed-in-auto-accident-near-thoothukudi
தூத்துக்குடி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு
thoothukudi-road-blockades-in-several-places-demanding-drainage-of-stagnant-rain-water
தூத்துக்குடி : தேங்கிய மழை நீரை வெளியேற்ற கோரி பல இடங்களில் சாலை மறியல்
thoothukudi-rape-case
மாற்றுத்திறனாளிக்கு பாலியல் வன்கொடுமை.. பாய்ந்தது போக்ஸோ சட்டம்.. நியாயம் கேட்டு தாய், மகள் தீக்குளிக்க முயற்சி
release-of-examination-schedule-for-10th-and-12th-class-within-10-days-minister-announced
இன்னும் 10 நாளில் 10, 12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியீடு: செங்கோட்டையன் தகவல்
vandu-murugan-style-challenge-dmk-personal-vehicles-damage
வண்டு முருகன் பாணியில் சவால் : திமுக பிரமுகர் வாகனங்கள் துவம்சம்
supreme-court-refused-reopening-of-sterlite-copper-plant-at-thoothukudi
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை.. சுப்ரீம் கோர்ட் மறுப்பு..
mysterious-ship-caught-near-thoothukudi-100-kg-of-heroin-seized
தூத்துக்குடி அருகே மர்ம கப்பல் சிக்கியது: 100 கிலோ ஹெராயின் பறிமுதல்
the-court-ordered-the-placement-of-boards-on-archeological-sites-in-public-places
மக்கள் கூடும் இடங்களில் தொல்லியல் பழமை வாய்ந்த இடங்கள் குறித்து போர்டுகள் வைக்க நீதிமன்றம் உத்தரவு
10-crore-worth-of-red-wood-confiscated-in-thoothukudi
தூத்துக்குடியில் ரூ 10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
kandasashti-festival-started-this-morning-at-the-thiruchendur-subramania-swamy-temple
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

READ MORE ABOUT :