கொரோனாவுக்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த pfizer, இன்னொரு நிறுவனம் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளன. இதேபோல் ரஷ்யா மற்றும் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளன. இவற்றில் சில மருந்துகள் 95 சதவிகிதம் வரை வெற்றிபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பு மருந்துகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஆய்வாளர்கள் சிலர் மாதுளை பழத்தோல் கொரோனா வைரஸை தடுக்கும் திறன் கொண்டது என கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக மாதுளை பழம் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், ஹெர்பெஸ் வைரஸ், போக்ஸ் வைரஸ்கள் போன்றவற்றிற்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டவை.
இந்தநிலையில் மாதுளை பழத்தோல் கொரோனா வைரஸ் எதிர்ப்பு திறன்கொண்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூலக்கூறு மற்றும் செல்லுலார் உயிர்வேதியியல் இதழில் "SARS-CoV-2 வைரஸ் உள்மயமாக்கலின் சாத்தியமான தடுப்பான்களாக மாதுளை தோல் பாலிபினால்கள் பற்றிய கணக்கீட்டு ஆய்வு” என்ற தலைப்பில் ஆய்வு குறித்த தகவல்கள் வெளியானது. இதில் SARS-CoV-2 இன் விளைவுகளைத் தடுக்கக்கூடிய பல பண்புகளைக் கொண்டிருப்பதால் மாதுளையின் நன்மைகள் குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் தான் மாதுளை பழத்தோல் கொரோனா வைரஸ் எதிர்ப்பு திறன்கொண்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த ஆராய்ச்சியை மேம்படுத்த ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.