தமிழக தீயணைப்பு துறையின் தீ செயலி!

by Loganathan, Nov 25, 2020, 17:33 PM IST

தமிழ்­நாடு தீயணைப்பு மற்­றும் மீட்­புப் பணி­கள் துறை­யின் சேவை­களை பொது­ மக்கள் எளிதில் பெறவும், தீ, விபத்து, வெள்­ளம், ஆழ்­து­ளைக்­ கி­ணறு விபத்து, வன­வி­லங்கு மீட்பு, ரசா­யனம் மற்­றும் விஷ­வா­யுக் கசிவு உள்­ளிட்ட அவ­சர உதவி­க­ளுக்கு இத்­து­றையை மக்கள் எளி­தில் அணு­கி­ட­வும், நவீன தொழில்­நுட்ப உத­வி­யு­டன் நாட்­டி­லேயே முதல் முறை­யாக தமிழ்­நாடு தீயணைப்பு மற்­றும் மீட்­புப் பணி­கள் துறை­யால் “தீ” எனும் அலை­பேசி செயலி உரு­வாக்கப்பட்டுள்ளது. ஆம்­டெக்ஸ் எனும் தொழில்நுட்ப நிறு­வ­னத்­து­டன் இணைந்து உரு­வக்கப்பட்ட இந்த அலை­பேசி செய­லி­யின் மூலம், அவ­சர காலங்­க­ளில் பாதிக்கப்­பட்ட மக்கள் தீயணைப்பு துறையை அணு­கு­வ­தற்­கும், அழைத்த 10 வினாடிக்­குள் தீயணைப்பு மற்றும் மீட்­புப் பணி­கள் நிலை­யங்­கள் தொடர்பு கொள்­ளப்பட்டு, விபத்து மற்­றும் உதவிகோரும் இடத்­திற்கு மிக குறு­கிய நேரத்­தில் தீயணைப்பு வீரர்­கள் தகுந்த உபகரணங்களோடு சென்று உத­வு­வ­தற்­கும் வழி­வகை செய்யப்பட்டுள்­ளது.

இதற்­காக “தீ” செய­லி­யு­டன் கூடிய 371 மடிக­ணி­னிகள் அனைத்து தீயணைப்பு மற்­றும் மீட்புப் பணி நிலையங்­கள் மற்­றும் சென்­னையில் உள்ள தீக் கட்­டுப்­பாட்டு அறைக்­கும் வழங்கப்படுகி­றது. தமிழ்­நாடு முத­ல­மைச்சர் அவர்­கள் இன்று“தீ” செயலியுடன் கூடிய முதல் மடி க­ணி­ணியை தீயணைப்பு மற்­றும் மீட்­புப் பணி­கள் துறை இயக்­கு­நர் எம்.எஸ் ஜாபர் சேட் அவர்­க­ளி­டம் வழங்­கி­னார்­கள். “தீ” செய­லியை மக்கள் தங்­களது அலைபேசிகளில் இல­வ­சமாக பதி­வி­றக்கம் செய்து, விபத்து அல்­லது இடர்­பா­டு­கள் ஏற்படும்­ போது உடன் தகவல் தரு­வதற்கு பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்.

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை