மன அழுத்தத்தால் மிகவும் துன்பப்படுகிறீர்களா?? கவலை வேண்டாம்..!

by Logeswari, Dec 8, 2020, 18:34 PM IST

பெரும்பாலும் தனிமையில் இருக்கும் பொழுது மன அழுத்தம் நம்மை கவர முயலும். தனிமையில் தேவையில்லாத நினைவுகள் தோன்றுவதின் விளைவாக சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். நம்மை சுற்றி உள்ளவர்கள், சமூகம் ஆகியவை தான் நம் மன உலைச்சலுக்கு முக்கிய காரணமாகும். இது மனதை மட்டும் சங்கடபடுத்தாமல் உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. சரி வாங்க மன அழுத்தத்தை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று சில குறிப்புகளை காணலாம்.

மனஅழுத்தத்தை குறைக்க எளிய வழிகள்:-

முதலில் மன அழுத்தம் என்பதை ஒரு நோயாக நினைக்க கூடாது. அப்பொழுது தான் அதன் பிடியில் இருந்து சீக்கிரம் வெளியே வர முடியும். தினமும் காலையில் ஆழமான சுவாச பயிற்சி செய்து வந்தால் மனம் புத்துணர்ச்சி பெறும்..

ஒரு மனிதன் தனக்கு போதுமான அளவுக்கு தூங்கி எழுந்தாலே மன அழுத்தம் குறையும். சரியான தூக்கம் இல்லை என்றால் மன உலைச்சலுக்கு ஆளாக கூடும். தூங்க செல்லும் போது மூலையில் எந்தவித சிந்தனையும் இருக்க கூடாது, முக்கியமாக செல்போனை பயன்படுத்தவே கூடாது..

தினமும் சூடான நீரில் குளியல் எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது தசைகள் யாவும் வலிமை பெறும். இதனால் மனமும் நிம்மதி அடைகிறது. காலையில் எழுந்தவுடன் யோகா, தியானம் ஆகியவற்றை செய்யுங்கள். ஏதாவது ஒரு வேலையில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். வெட்டியாக இருக்கும் பொழுது தேவையில்லாத எண்ணங்கள் எட்டிப் பார்க்கும்..

நாம் சாப்பிடும் உணவில் கூட கவனம் தேவை. எனென்றால் நாம் ஆரோக்கியமாக சாப்பிட்டால் மட்டுமே உடலுக்கு எந்த வித தீங்கும் எற்படாது. தினமும என்ன சாப்பிட வேண்டும் என்பதை திட்டம் போட்டு சாப்பிடுங்கள். மன அழுத்தமும் குறையும்.. ஆரோக்கியமும் வளரும்..

You'r reading மன அழுத்தத்தால் மிகவும் துன்பப்படுகிறீர்களா?? கவலை வேண்டாம்..! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை